தேதி: January 10, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
உருளைக்கிழங்கு - ஒன்று
லீக் - ஒன்று
சிக்கன் ஸ்டாக் - ஒரு கப்
க்ரீம் - கால் கப்
தண்ணீர் - தேவைக்கேற்ப
அலங்கரிக்க:
மிளகுத் தூள்
சிக்கன் துண்டுகள் - 2 (வேக வைத்து உதிர்த்தது)
உப்பு - தேவைக்கேற்ப
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். உருளை மற்றும் லீக்ஸை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய லீக்ஸைப் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

கொதிக்கத் துவங்கியதும் நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து மூடியிட்டு வேகவிடவும்.

காய்கள் வெந்ததும் ஆறவிடவும்.

ஆறியதும் மிக்ஸியில் அல்லது பிளண்டரில் போட்டு சூப் பதத்திற்கு அடிக்கவும்.

கலவை கெட்டியாக இருக்கும். அதை மீண்டும் அடுப்பில் வைத்து சிக்கன் ஸ்டாக் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது கொதி நீர் ஊற்றி சூடாக்கவும். அத்துடன் க்ரீமையும் (Full Cream) சேர்த்து ஒரு கொதிவரவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான லீக் & உருளை சூப் ரெடி. பரிமாறும் போது தேவையான அளவு உப்பு, மிளகுத் தூள் மற்றும் வேக வைத்து உதிர்த்த சிக்கன் துண்டுகளைத் (Shredded Chicken) தூவி, கால் தேக்கரண்டி க்ரீம் சேர்க்கவும். கார்லிக் ப்ரெட்டுடன் சூடாகப் பரிமாறவும்.

சிக்கன் ஸ்டாக் செய்முறை : <a href="/tamil/node/29887"> சிக்கன் ஸ்டாக் </a>
Comments
வாணி செல்வின்
வித்தியாசமான குறிப்பு பார்க்கவே சூப்பரா இருக்கு. படங்கள் பளீச்.. வாழ்த்துகள் வாணி..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
vani selwyn
வித்தியாசமான குறிப்பு . சூப்பர்
Be simple be sample
வாணி செல்வின்
லீக்ஸ் & கிழங்கு சேர்ந்த சுவை எனக்குப் பிடிக்கும். வேறு ஏதாவது ஸ்டாக் வைத்து ட்ரை பண்ணுறேன்.
- இமா க்றிஸ்
Hi vani. sister
I m newly member in ths ...
i lk all u r recpies.nice..it inspire me to cook..u r amazing..well done