தேதி: January 13, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. லாவண்யா அவர்களின் பீட்ரூட் சூப் என்கின்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய லாவண்யா அவர்களுக்கு நன்றிகள்
கேரட் - 2
பீட்ரூட் - ஒன்று
பாசிப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
ஆலிவ் ஆயில் / வெண்ணெய் - 2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
ஒரு கிண்ணத்தில் பீட்ரூட், கேரட் மற்றும் பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.

வேக வைத்தவற்றை மிக்ஸியில் போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்து, 3 கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

கலவை கொதித்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

தக்காளி சாஸ், மிளகுத் தூள், உப்பு மற்றும் வெண்ணெய் சேர்த்துப் பரிமாறவும்.

சுவையான, சத்தான பீட்ரூட் சூப் தயார்.
