ரவை கோதுமை ஊத்தாப்பம்

தேதி: January 13, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. வாணி ரமேஷ் அவர்களின் ரவை கோதுமை ஊத்தாப்பம் குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய வாணி அவர்களுக்கு நன்றிகள்.

 

கோதுமை மாவு - ஒரு கப்
ரவை - ஒரு கப்
உப்பு - அரை தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் ரவை, உப்பு, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி கலந்து எடுத்துக் கொள்ளவும்.
தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள மாவை தோசையாக வார்த்து எடுக்கவும்.
தேங்காய் சட்னியுடன் பரிமாற, சுவையான ரவை கோதுமை ஊத்தாப்பம் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்