Friends,
I m new to this arusuvai, nan oru content bookmark pannunum appadina epadi seivathu. Konjam yaravathu explain panna mudiyuma.
Friends,
I m new to this arusuvai, nan oru content bookmark pannunum appadina epadi seivathu. Konjam yaravathu explain panna mudiyuma.
புக் மார்க்
கண்டெண்ட் புக் மார்க் என்று நீங்கள் குறிப்பிடுவது கண்டெண்ட் அடங்கியுள்ள ஒரு பக்கம் என்று யூகிக்கின்றேன். அதேபோல், நீங்கள் அறுசுவை பக்கத்தினை புக்மார்க் செய்ய விரும்புகின்றீர்களா அல்லது வேறு இணையப் பக்கங்களை புக் மார்க் செய்ய விரும்புகின்றீர்களா என்பது தெரியவில்லை.
அறுசுவையில் இருக்கும் சமையல் குறிப்புகள் மற்றும் கைவினைப் பகுதி பக்கங்களை நீங்கள் அறுசுவையிலேயே புக்மார்க் செய்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் அறுசுவையில் லாகின் செய்ய வேண்டும். லாகின் செய்த பிறகு சமையல் குறிப்போ, கைவினைக் குறிப்போ அடங்கியுள்ள பக்கத்திற்குச் சென்றால் அங்கே குறிப்பின் கீழே "விருப்பப்பட்டியலில் சேர்" (சமையல் குறிப்பில் இப்படி இருக்கும்.) அல்லது "bookmark" (கைவினை, கட்டுரை, கதை பகுதிகளில் இப்படி இருக்கும்) என்று இருக்கும் லிங்க்கை கிளிக் செய்தால் மட்டும் போதுமானது. அவை புக் மார்க் செய்யப்பட்டுவிட்டது என்ற ஒரு வாக்கியம் அங்கே தோன்றும். புக்மார்க் செய்வது என்பது அவ்வளவுதான். நீங்கள் புக்மார்க் செய்தவற்றை மீண்டும் பார்க்க விரும்பினால், உங்கள் உறுப்பினர் பெட்டியில், அதாவது நீங்கள் லாகின் செய்த பின்பு வலப்பக்கம் உங்கள் பெயரிட்டு வரும் பெட்டியில் "விருப்பப்பட்டியல்" "எனது புக்மார்க்ஸ்" என்று இரண்டு லிங்க் இருக்கும். அதை கிளிக் செய்து நீங்கள் புக்மார்க் செய்த சமையல் குறிப்புகள் அல்லது மற்ற பக்கங்களை மீண்டும் பார்வையிடலாம். இது அறுசுவையில் புக்மார்க் செய்வது குறித்த விளக்கம்.
பொதுவாக உங்கள் ப்ரவுஸரில் நீங்கள் புக்மார்க் செய்து கொள்ளலாம். அறுசுவை என்று இல்லாமல் எந்த தளத்தில் உள்ளதையும் புக்மார்க் செய்யலாம். உங்கள் ப்ரவுஸர் மேலே உள்ள மெனு பாரில் Bookmarks என்று ஒரு ஆப்சன் இருக்கும். அதில் Bookmark this page என்று ஒரு லிங்க் இருக்கும். அதை கிளிக் செய்து நீங்கள் இணையத்தில் பார்க்கும் எந்தப் பக்கத்தையும் புக்மார்க் செய்துகொள்ளலாம். Ctrl D அழுத்தினாலே அந்த புக்மார்க் ஆப்சன் உங்களுக்கு கிடைக்கும். அதில் நீங்கள் நிறைய folders கிரியேட் செய்து வைத்துக்கொள்ளலாம். உதாரணமாக, அறுசுவை பக்கங்களை மட்டும் தனியே புக்மார்க் செய்து கொள்ள விரும்பினால், அறுசுவை என்று ஒரு ஃபோல்டர் கிரியேட் செய்து வைத்துக்கொண்டு, அதில் அறுசுவை பக்கங்களை மட்டும் புக்மார்க் செய்யலாம். மீண்டும் புக்மார்க்ஸ் வந்து குறிப்பிட்ட பக்கத்தை எடுப்பதற்கு அது உதவியாக இருக்கும்.
Admin அவர்களுக்கு
தெளிவுபடுத்தியதற்கு மிக்க நன்றி
நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..
அன்புடன்
Sheela