தேதி: January 15, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சுபா ஜெயப்ரகாஷ் அவர்களின் ஆலு பாலக் தால் என்கின்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சுபா அவர்களுக்கு நன்றிகள்.
உருளைக்கிழங்கு - 2
ஸ்பினாச் - ஒரு கட்டு
துவரம் பருப்பு - கால் கப்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 4 (தட்டி வைக்கவும்)
பச்சை மிளகாய் - 3
தக்காளி - ஒன்று
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
உருளைக்கிழங்கைத் தோலை சீவி சிறுத் துண்டுகளாக நறுக்கி உப்பு கலந்த தண்ணீரில் 2 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதன் பிறகு 4 நிமிடங்கள் வேக வைக்கவும். நறுக்க வேண்டிய மற்ற பொருட்களையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு சீரகம் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் தட்டி வைத்திருக்கும் பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி, ஸ்பினாச் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கி, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

3 நிமிடங்களுக்குப் பிறகு வேக வைத்த பருப்பையும் அதில் சேர்த்துக் கிளறவும்.

ஒரு கொதி வந்து கலவை சற்று கெட்டியானதும் இறக்கி பரிமாறலாம்.

Comments
ஆலு ஸ்பினாச் தால்
பார்க்கவே கலர்ஃபுல்லா இருக்குது சிஸ் . வாழ்த்துக்கள் கிச்சன் குயின்!
வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!
ஆலு ஸ்பினாச் தால்
எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி.
குறிப்பை வழங்கிய சுபா அவர்களுக்கும் நன்றி..
என்றும் அன்புடன்,
கவிதா
மெர்சி
மெர்சி
வாழ்த்திற்கும்,வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி
என்றும் அன்புடன்,
கவிதா