தட்டப்பயறு குழம்பு

தேதி: January 15, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சரஸ்வதி அவர்களின் தட்டப்பயறு குழம்பு என்ற குறிப்பு, சில மாற்றங்கள் செய்து விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சரஸ்வதி அவர்களுக்கு நன்றிகள்.

 

தட்டப்பயறு (காராமணி பயறு) - 100 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கத்தரிக்காய் - 2
பூண்டு - 4
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள், சோம்பு, சீரகத்தூள் - தலா அரை தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு, சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
காய்ந்த மிளகாய் - 2
தேங்காய் விழுது - 2 தேக்கரண்டி


 

முளைகட்டிய தட்டப்பயறுடன் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
பாதி வெந்தவுடன் அதில் வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், பூண்டு சேர்த்து வேக வைக்கவும்.
வெந்ததும் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சோம்பு, சீரகத் தூள் மற்றும் புளிக் கரைசலை ஊற்றி, உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து குழம்பில் சேர்க்கவும். தேங்காய் அரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும்.
சுவையான தட்டப்பயறு குழம்பு தயார். கொத்தமல்லித் தழை சேர்த்து பரிமாறவும்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி.
குறிப்பை வழங்கிய சரஸ்வதி அவர்களுக்கும் நன்றி..

என்றும் அன்புடன்,
கவிதா