பாலக் பனீர்

தேதி: January 27, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

2 லிட்டர் பாலில் பனீர் தயாரித்துக்கொள்ளவும்
சீஸ்- 1/2 கிலோ
பெரிய வெங்காயம்- 3
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 4
இஞ்சி- 1 அங்குல துண்டு
பூண்டு- 5 பல்
கீரை - 2 கட்டு
எண்ணெய் - 8 மேசைக்கரண்டி
மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி
மைதா- 1மேசைக்கரண்டி
உப்பு- தேவையான அளவு


 

சீஸை மிக மெல்லியதாக துருவிக்கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

பச்சைமிளகாயையும்,இஞ்சியையும் மிகவும் பொடியாக நறுக்கவும்.

பூண்டை கரகரப்பாக அரைக்கவும்.

முதலில் வாணலியில் 5 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி பனீரை பொன்னிறமாக வறுக்கவும்.

கீரையை நன்கு சுத்தம் செய்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைத்து அரைத்துக்கொள்ளவும்.

பின் ஒரு சட்டியில் மீதம் இருக்கும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தக்காளியை போட்டு வதக்கி,வெங்காயம்,பச்சைமிளகாய்,மைதா, மிளகாய்தூள்,இஞ்சி,பூண்டு இவற்றை போட்டு நன்கு வதக்கவும்.

பின் அரைத்த கீரை,உப்பு சேர்த்து கிளறி மிதமான தீயில் 3 நிமிடம் வேகவிடவும்.

பின் வறுத்த பனீரை சேர்த்து மேலும் 5 நிமிடம் வேகவிட்டு இறக்கவும்.

இதை பரோட்டா,சப்பாத்தி உடன் சாப்பிடலாம்


மேலும் சில குறிப்புகள்