ஆலூ புர்தா

தேதி: January 16, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம் (அ) பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சை - ஒன்று
நெய் - 2 மேசைக்கரண்டி (அ) எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிது


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை கழுவி இரண்டாக நறுக்கி வேக வைக்கவும்
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
வேக வைத்த கிழங்கை நன்கு மசித்துக் கொள்ளவும், எலுமிச்சையை நறுக்கி சாறு எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் மிளகாய்த் தூள் சேர்க்கவும்.
பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
அவை வதங்கியதும் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து ஒன்றாகக் கலந்து வரும்படி நன்கு கிளறி, ஓரிரு நிமிடங்கள் அடுப்பில் வைத்திருந்து இறக்கவும்.
சுவையான ஆலூ புர்தா தயார். கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை வெளியிட்ட‌ அறுசுவை குழுவுக்கு எனது நன்றிகள்..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

Congrts sumi. எல்லா குறிப்பும் சூப்பரா இருக்கு .

Be simple be sample

படங்கள் எல்லாமே தெளிவா இருக்கிறது சிஸ். இது சைடிஷ் ஆ சாப்டா நல்லாருக்குமா இல்ல‌ குருமா மாதிரி சாப்டலாமா?

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

உங்க‌ வாழ்த்துக்கு என் நன்றிகள் ரேவ்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

பதிவுக்கு நன்றிகள்.
//இது சைடிஷ் ஆ சாப்டா நல்லாருக்குமா இல்ல‌ குருமா மாதிரி சாப்டலாமா?// நாங்க‌ சப்பாத்திக்கு சைட்டிஷாக‌ தான் சாப்பிட்டோம்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....