மாங்காய் ஊறுகாய்

தேதி: January 27, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மாங்காய் - 2 பெரியது
எழுமிச்சைபழம் - 2
உப்பு - தேவையான அளவு
கடுகு- 2 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 10 தேக்கரண்டி
மிளகாய்தூள்- 2 மேசைக்கரண்டி
பெருங்காயதூள்-கால் தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது


 

முதலில் மாங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி,உப்பு சேர்த்து எழுமிச்சை பழத்தை சாறு எடுத்து இத்துடன் கலந்து 2 நாள் ஊறவிடவும்.

1 தேக்கரண்டி கடுகு,வெந்தயத்தை வறுத்து தூளாக்கிக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி மீதி உள்ள கடுகு போட்டு வெடித்ததும் ,கருவேப்பிலை போட்டு தாளித்து இறக்கவும்.

ஊறிய மாங்காய் துண்டுகளுடன் மிளகாய்தூள், பெருங்காயதூள்,தூளாக்கிய கடுகு, வெந்தயத்தூள் போட்டு நன்கு கிளறவும்.பின் கடுகு தாளிப்பையும் சேர்த்து நன்கு கிளறி நல்லெண்ணெய் ஊற்றி கிளறி பாட்டிலில் அடைத்துவைத்து உபயோகிக்கவும்


மேலும் சில குறிப்புகள்