பெங்கலூர் சுற்றுலா தலம்

ப்ரென்ட் மை ரிலேடிவ் பெங்கலூர் டூர் வந்துருக்காங்க‌.. மைசூர்லதா நரயா இடம் இருக்கு ஆனால் அவங்க‌ இப்ப பெங்கலூர் போய்ருக்காங்க‌.. எனக்கு அந்த‌ ஊர் பத்தி எதும் தெரில‌... சுத்தி பார்க்க‌ அவங்க‌ ஃபம்லி ஒட‌ என்ஜாய் பன்ன‌ சுத்தி பாக்க‌ இடம் சொல்லுங்க‌ ஃப்ரென்ட்ஷ் 2 நாள் தங்க‌ போராங்க‌ அதற்கு தகுந்த‌ மாதிரி இடம் சொல்லுஙக‌ தோழிகளே

//2 நாள் தங்க‌ போராங்க‌ // இரண்டு நாள் என்பது இரண்டு பகல் பொழுது மட்டுமா? இது குறைவான காலம்தான். நிறைய இடங்கள் பார்க்க இயலாது. பார்ப்பதற்கு என்னவெல்லாம் இருக்கின்றது, உத்தேசமாக எவ்வளவு நேரம் எடுக்கும் என்று பட்டியல் இடுகின்றேன். அவர்களுக்கு விருப்பமான இடங்களை அவர்களே தேர்வு செய்துகொள்ளட்டும்.

பூங்காக்களில் ஆர்வம் இருந்தால் -

1. லால் பாக் - குறைந்தது 3 மணி நேரம்
2. கப்பன் பார்க் - குறைந்தது 1 மணி நேரம்
3. பென்னாரஹட்டா புலிகள் சரணாலயம் - குறைந்தது அரை நாள்

லால் பாக் பார்க்க வேண்டிய பூங்கா. பெரிய இடம். சுற்றி வருவதற்கு இரண்டு மணி நேரம் பிடிக்கலாம். மரங்கள், செடிகள், மலர்கள் என்று இருக்கும். அதில் ஆர்வம் இருந்தால் இந்த இடத்தைத் தவற விடக்கூடாது.

கப்பன் பார்க்கில் பெரிதாக ஒன்றும் இருக்காது. சிறுவர் பூங்காவும், விளையாடும் இடமும் இருக்கும். சிறுவர்கள் இருந்தால் சில மணி நேரங்கள் அங்கே செலவிடலாம். ஒரு எண்ட்ரன்ஸ் அருகில் மீன் காட்சியகம் ஒன்று உள்ளது. அதில் ஒரு மணி நேரம் செலவிடலாம்.

பென்னாரஹட்டா பார்க் கொஞ்சம் தொலைவில் உள்ள இடம். மெஜஸ்டிக்கில் இருந்து ஏசி பஸ் உள்ளது. அதில் போய் திரும்பி வரலாம். அங்கே ஒரு சிறிய ஜூ உள்ளது. அதைத் தவிர திறந்தவெளியில் புலிகள் உலாவுவதை நீங்கள் வேனில் சென்று பார்க்கலாம். zoo வை ரசிப்பவர்களாக இருந்தால் இங்கே சென்று வரலாம். எப்படியும் அரை நாள் எடுக்கும்.

உங்கள் பெயரைப் பார்த்து நீங்கள் எந்த மதத்தினர் என்று முடிவு செய்ய முடியவில்லை. இஸ்லாமியரோ என்று யூகிக்கின்றேன். ஒருவேளை இந்து வாக இருந்தால் அல்லது இந்து ஆலயங்களில் ஆர்வம் உடையவராக இருந்தால் கீழ்க்கண்ட இடங்களுக்கு சென்று வரலாம்.

1. சிவா மந்திர் - குறைந்தது ஒரு மணி நேரம்
2. இஷ்கான் டெம்பிள் - குறைந்தது 3 மணி நேரம்
ஜெயநகர் ஆஞ்சநேயர் கோயில், அல்சூர் சோமேஸ்வரர் கோயில் எல்லாம் பிரபலமான கோயில்கள். ஆர்வம் இருந்தால் மட்டும் செல்லலாம்.

சிறுவர்கள் இருக்கின்றார்கள் என்றால் wonderla water theme park செல்லலாம். ஒரு பகல் பொழுது முழுவதும் இதற்கே சரியாக இருக்கும்.

ஹைஸ்கூல் படிக்கக்கூடிய பிள்ளைகள், படிப்பில் ஆர்வம் உள்ள பிள்ளைகள் இருந்தால் விஸ்வேஸ்வரய்யா மியூசிகம் செல்லலாம். மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். குறைந்தபட்சம் அரை நாள் எடுக்கும்.

வரலாற்று சிறப்பு மிக்க இடங்களைப் பார்ப்பதில் ஆர்வம் இருந்தால், திப்பு சுல்தான் கோட்டை, பெங்களூர் கோட்டை பார்க்கலாம். ஒவ்வொன்றும் குறைந்தது 2ல் இருந்து 3 மணி நேரங்கள் எடுக்கும். விதான் சௌதா கட்டிடம் முக்கியமான ஒன்று. உள்ளே செல்லமுடியாது என்றாலும், இதன் முன்னால் அமர்ந்து படம் எடுத்துக்கொள்ளவில்லையென்றால் நீங்கள் பெங்களூரு சென்றதை யாரும் நம்பமாட்டார்கள்.

ஷாப்பிங்கில் ஆர்வம் இருந்தால், ஷாப்பிங்க் மால்கள் நிறைய இருக்கின்றன. Orion, Phoenix, Ascendas Park, Forum, Garuda Mall, Royal Meenakshi.. இப்படி சிறியதும் பெரியதுமாக நிறைய மால்கள் இருக்கின்றன. எதேனும் ஒன்று அல்லது இரண்டு சென்று வரலாம். மால்கள் தவிர ப்ரிகேட் ரோடு, அவென்யூ ரோடு, கமர்ஷியல் ஸ்ட்ரீட் என்று ஷாப்பிங்கிற்கு பிரபலமானத் தெருக்களும் இருக்கின்றன.

அவர்கள் இருக்குமிடத்தில் இருந்து ஒவ்வொரு இடத்திற்கும் செல்வதற்கு எடுக்கும் கால அளவை இதில் சேர்க்கவில்லை. அது அவர்கள் எங்கே தங்குகின்றார்கள், எப்படி செல்கின்றார்கள் என்பதைப் பொறுத்தது. இந்தப் பட்டியலில் இடம்பெறாத இன்னும் சில இடங்கள் இருக்கின்றன. அவை அவ்வளவு முக்கியமானவை அல்ல.

thanks அண்ணா அவங்க‌ நீங்க‌ சொன்ன‌ இடத்துக்கு போய்ருக்காங்க‌.. நல்லா இருக்கு சொன்னாங்க‌ உங்களுக்கு நன்றி சொல்ல‌ சொன்னாங்க‌ இப்ப‌ ஷாப்பிங் போய்ருக்காங்க‌

மேலும் சில பதிவுகள்