தேதி: January 17, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கோதுமை மாவு - ஒரு கப்
ஓட்ஸ் - முக்கால் கப்
பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை
வெனிலா எசன்ஸ் - 3 துளிகள்
பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி
சர்க்கரை - அரை தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
பால் - ஒன்றரை கப்
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். பாலை காய்ச்சி ஆற வைக்கவும்.

ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸுடன் மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து காய்ச்சி ஆறிய பாலை ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்.

தோசை கல்லில் எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை சிறிய தோசைகளாக வார்த்து மிதமான சூட்டில் வேக வைக்கவும்.

ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு, மறுபக்கத்தையும் வேகவிட்டு எடுக்கவும்.

மேப்பிள் சிரப் அல்லது தேனை பான் கேக் மேலே ஊற்றி பரிமாறவும். குழந்தைகளுக்கேற்ற மாலை நேர சிற்றுண்டி இது.

Comments
பான்கேக்
குழந்தைகளுக்கு செய்யகூடிய எளிய குறிப்பு சூப்பர்
Be simple be sample
பான் கேக்
வீட் - ஓட்ஸ் பான் கேக் அருமை. செய்வதும் சுலபம், நிச்சயம் குழந்தைகள் விரும்புவாங்க. வாழ்த்துக்கள்.
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
Revathi
தாங்க்ஸ் ரேவதி .
நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..
அன்புடன்
Sheela
சுமிபாபு
இது ரொம்ப ஈஸி, ஈவ்னிங் ஸ்நாக்ஸா பண்ணலாம்.
நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..
அன்புடன்
Sheela
ஷீலா
சிம்பிளா சூப்பரான ஹெல்தியான டிஷ். அருமையா இருக்கு.
எல்லாம் சில காலம்.....