கோதுமை மாவு தோசை

கோதுமை மாவு தோசை செய்யும் போது தோசை பிய்ந்து வருகிறது. தோசை பிய்ந்து போகாமல் இருக்க வழி சொல்லுங்கள்.

தண்ணீர் அதிகமானால் தோசை பிய்த்துக்கொண்டு போகும் அதுக்கு தண்ணீரை குறைத்துக்கொண்டு அதில் 1முட்டை அரை கப் தேங்காய்பால் சேர்த்துக்கொண்டு தோசை சுட்டால் பிய்த்து போகாது

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

கோதுமை மாவில் தோசை செய்யும்போது மாவை தண்ணீருடன் நீண்ட நேரம் கலக்கக்கூடாது. கட்டிகள் இல்லாமல் கையினாலோ, மிக்ஸி அல்லது மிக்ஸர் மெஷினில் கலக்குவதாக இருந்தால் 10 செகண்ட் மட்டும் கலக்கி கரைத்துக்கொள்ளுங்கள். பிறகு அதனுடன் (சுமார் 1/2 கிலோ மாவுக்கு 2 பிடி வீதம்) ரவாவை சேர்த்து கலக்கிக்கொள்ளுங்கள். அப்போது தோசை பிய்ந்து போகாமல் இருப்பதோடு ஓரங்களில் மொருமொருப்பாக இருக்கும். Try பண்ணிவிட்டு சொல்லுங்கள்!

வெறும் கோதுமை மாவை மட்டும் கரைக்காமல், கூடவே சிறிது அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும். எனக்கு மிகவும் பிடித்தது, கோதுமை மாவில் சிறிது புளித்த தோசை மாவை கலந்து, நறுக்கின சின்ன வெங்காயம், சீரகம், நறுக்கின பச்சை மிளகாய் போட்டு செய்யப்படும் கோதுமை தோசைதான்.

ஒரு கோப்பை கோதுமை மாவுடன் அரை கோப்பை அரிசி மாவு அல்லது ரவை சேர்த்து அதனுடன் அரை கோப்பை கடலை மாவு, அரை தேக்கரண்டி உப்பு மற்றும் அரை கோப்பை புளித்த தயிர் சேர்த்து செய்து பாருங்கள்.
இதனுடன் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து செய்யலாம். சுவையாக இருக்கும்.

வெறும் கோதுமை மாவை மட்டும் கொண்டு செய்வதானால்.......தோசை கல் அதிகம் சூடாக இல்லாமல், இளம் சூடாக இருக்கும் போது செய்து பார்க்கவும். ஒட்டாமல் வரும்.

நன்றி...

admin அவர்களுக்கு நன்றி.

VaniRamesh அவர்களுக்கு நன்றி.

Julaiha அவர்களுக்கு நன்றி.

Try பண்ணினேன். நன்றாக இருந்தது. நன்றி.

மேலும் சில பதிவுகள்