அல்லம் பச்சடி

தேதி: January 19, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. லாவண்யா அவர்களின் அல்லம் பச்சடி என்கின்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய லாவண்யா அவர்களுக்கு நன்றிகள்.

 

தேங்காய்ப் பல் - கால் கப்
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 3
இஞ்சி - 2 அங்குலத் துண்டு
புளி - நெல்லிக்காய் அளவு
வெல்லம் - 2 தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இஞ்சியுடன், தேங்காய், புளி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் இல்லாமல் அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் தாளிக்கவும்.
தாளித்தவற்றை அரைத்தவற்றுடன் சேர்த்துக் கலக்கவும்.
சுவையான அல்லம் பச்சடி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கிச்சன் குயினுக்கு வாழ்த்துக்கள்...

ஏதோ வித்தியாசமான‌ பெயராக‌ தெரிகிறதேன்னு, ஆர்வத்தோட‌ பார்த்தேன்....கடைசியில் வெல்லம் சேர்த்த‌ நம்ம ஊர் தேங்காய் சட்னி....

எல்லா குறிப்புகளுமே நல்லா செய்து காட்டியிருக்கிறீர்கள் ரேவதி, சூப்பர் ....படங்கள் அருமை.