கிட்ஸ் க்ராஃப்ட் - உல்லன் டெடி பியர்

தேதி: January 19, 2015

Average: 5 (1 vote)

 

சார்ட் பேப்பர்
உல்லன் நூல் - மெரூன், மஞ்சள் நிறத்தில்
கத்தரிக்கோல்
ஃபெவிக்கால்
பென்சில்
ஸ்டிக்கர் பொட்டு - கண், மூக்கு மற்றும் வாய்ப் பகுதிக்கு

 

தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். சார்ட் பேப்பரை நான்கு துண்டுகளாக நறுக்கி, அதில் ஒரு துண்டு சார்ட் பேப்பரை எடுத்துக் கொள்ளவும்.
சார்ட் பேப்பரில் படத்தில் உள்ளது போல் டெடிபியர் வடிவத்தை வரைந்து, அதில் மெரூன் நிற உல்லன் நூலை ஃபெவிக்கால் வைத்து அவுட் லைன் போல ஒட்டிக் கொள்ளவும்.
பிறகு இரண்டு நிற உல்லன் நூலையும் தேவையான அளவு எடுத்துக் கொண்டு, அவற்றை ஓரளவு சிறு துண்டுகளாக மடக்கி கத்தரிக்கோலால் மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
இப்போது டெடி பியரின் தலை மற்றும் உடல் பகுதி முழுவதும் ஃபெவிக்கால் தடவி, நறுக்கிய மஞ்சள் நிற நூலை தூவவும். (இடைவெளி தெரியாமல் நன்கு அடர்த்தியாக நூலை தூவிவிடவும்).
இதே போல் காது, கை, கால் பகுதிக்கும் ஃபெவிக்கால் தடவி மெரூன் நிற நூலை ஒட்டவும்.
பிறகு கண், மூக்கு, வாய்ப் பகுதிக்கு ஸ்டிக்கர் பொட்டினை ஒட்டிவிடவும். மெரூன் நிற உல்லன் நூலை சிறியதாக சுருட்டி உடல் பகுதியில் பட்டனை போல் ஒட்டவும். குழந்தைகள் மிகவும் எளிதாக செய்யக்கூடிய டெடி பியர் ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

க்யூட்டா இருக்கார்.

சின்னவங்களுக்கு வாழ்த்திதழாக செய்யச் சொல்லிக் கொடுக்கப் போறேன் டீம்.

‍- இமா க்றிஸ்

சூப்பரான‌ குட்டீஸ் கிராப்ட்....பசங்க‌ செய்யறதுக்கு எளிமையாகவும், இன்ட்ரெஸ்டிங்காகவும் இருக்கு....