தேதி: January 20, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஜுலைஹா அவர்களின் கேரட் பட்டாணி ரைஸ் என்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஜுலைஹா அவர்களுக்கு நன்றிகள்.
பாசுமதி அரிசி - அரைக் கிலோ
கேரட் - 4
பட்டாணி - 100 கிராம்
முட்டை - 2
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 5 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கேரட், பட்டாணியை போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

வெந்த கேரட்டை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். பட்டாணியை தனியாக எடுத்துக் கொள்ளவும்.

அரிசியை உதிர் உதிராக வேக வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கொத்தி விட்டு பொரிக்கவும்.

முட்டை நன்கு பொரிந்ததும் அதில் கேரட், பட்டாணியை போட்டு கிளறவும்.

பின்னர் கேரட், முட்டை கலவையில் சாதத்தைப் போட்டு கிளறவும்.

சாதத்தை சேர்த்து நன்கு கிளறியவுடன் சோயா சாஸ் ஊற்றி மிளகுத் தூள் மற்றும் உப்பு போட்டு கிளறி அடுப்பை அணைக்கவும்.

சூடான சுவையான கேரட் பட்டாணி சாதம் ரெடி.

Comments
ரேவதி
வாழ்த்துக்கள் கிச்சன் குயின், கலர்புல் Rice, படங்கள் சூப்பர் :-)