தேதி: January 20, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. லாவண்யா அவர்களின் சாம்பார் பொடி இல்லா சாம்பார் என்கின்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய லாவண்யா அவர்களுக்கு நன்றிகள்.
துவரம் பருப்பு - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
வெண்டைக்காய் - 200 கிராம்
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
துவரம்பருப்பை நன்கு கழுவி மஞ்சள் தூள், சிறிதளவு பெருங்காயம், தக்காளி, 2 சொட்டு எண்ணெய் சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை வேக வைக்கவும். தக்காளியை தனியாக எடுத்து வைத்து விட்டு பருப்பை கடைந்து வைக்கவும். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயம் தாளித்து வேக வைத்த தக்காளியை பிழிந்து அதில் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் வெண்டைக்காய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

வதக்கியவற்றுடன் ஒரு கப் தண்ணீர், உப்பு மற்றும் எல்லா தூள் வகைகளையும் சேர்த்து கொதிக்க விடவும்.

10 நிமிடம் கழித்து கடைந்து வைத்துள்ள பருப்பை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு புளித் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

மீதமுள்ள எண்ணெயில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்.

சுவையான சாம்பார் பொடி சேர்க்காத சாம்பார் தயார். கொத்தமல்லி தூவி பரிமாறவும். எந்த காய் வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம்.

Comments
ரேவதி சிஸ்
எல்லா குறிப்புகளும் பார்க்கும் போதே கண்ணை பறிக்குது. சாம்பார் செய்முறை பிடிச்சுருக்கு. நாங்க வெண்டை சேர்க்காமல் செய்வோம்.
நன்றி!
வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!
enaku sambar matum taste
enaku sambar matum taste varala. na idha try pandren.