ப்ரோக்கலி லெமன் வறுவல்

தேதி: January 21, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

திருமதி. லாவண்யா அவர்களின் பிரொக்கோலி லெமன் வறுவல் குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய லாவண்யா அவர்களுக்கு நன்றிகள்.

 

ப்ரோக்கலி - ஒன்று (சிறியது)
பூண்டு - 2 பற்கள்
ஆலிவ் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி
எலுமிச்சை பழம்
மிளகு - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

ப்ரோக்கலித் தண்டின் மேலுள்ள தடித்த பாகத்தை நீக்கிவிட்டு, சிறு பூக்களாக எடுத்து வைக்கவும்.
எலுமிச்சையின் மேல் தோலை (ஜெஸ்ட்) ஒரு கரண்டியால் சுரண்டி எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய பூண்டைச் சேர்த்து வாசம் போகும் வரை வதக்கவும்.
அத்துடன் ப்ரோக்கலியைச் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கி, சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக வைக்கவும்.
கடைசியாக உப்பு சேர்த்து கிளறி 2 நிமிடங்கள் வைத்திருந்து, மிளகு, எலுமிச்சை சாறு மற்றும் ஜெஸ்ட் சேர்த்து இறக்கவும்.
சத்துக்கள் நிறைந்த, சுவையான ப்ரோக்கலி லெமன் வறுவல் தயார்.

ப்ரோக்கலியில் வைட்டமின் A, C, K மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் இதய நோயைத் தடுக்கும் சக்தியும் உள்ளது. இது புற்று நோய்க்கான மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

இதனை 10 நிமிடங்களுக்கு மேல் வேக வைத்தால் இதன் சத்துக்கள் வீணாகிப் போய்விடும்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ்னு சொல்ல‌ தோணுது. ரொம்ப‌ நல்லா செய்து இருக்கீங்க‌ எல்லாமே. வாழ்த்துக்கள் கிட்சன் குயின்.

எல்லாம் சில‌ காலம்.....

ரொம்ப நன்றி. கிச்சன் குயின் வந்த பிறகு வித்தியாசமான சமையல் வீட்டிலும் கிச்சன் குயின் ஆகியாச்சு