முள்ளங்கி புகாது

தேதி: January 22, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மனோகரி அவர்கள் வழங்கியுள்ள முள்ளங்கி புகாது குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மனோகரி அவர்களுக்கு நன்றிகள்.

 

முள்ளங்கி - அரை கிலோ
வெங்காயம் - 2
காய்ந்த மிளகாய் - 4
பூண்டு - 2 பற்கள்
தேங்காய்ப் பூ - அரை கப்
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்புத் தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

முள்ளங்கியின் தோலை சீவி நன்கு கழுவிவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தையும் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும், காய்ந்த மிளகாயை கிள்ளி வைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தைக் காயவைத்து முள்ளங்கியைப் போட்டு வதக்கவும். காயிலுள்ள நீர் முழுவதும் வற்றும் வரை வதக்கி ஒரு தட்டில் கொட்டி வைக்கவும். இப்பொழுது காய் அரை வேக்காடாக வெந்து இருக்கும்.
அதே பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு வெடித்தவுடன் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
அதனுடன் வதக்கிய முள்ளங்கியைப் போட்டு, உப்பு சேர்த்து நன்கு கிளறிவிடவும். பிறகு அரை கப் நீரைத் தெளித்து மூடி போட்டு வேகவிடவும்.
நீர் முழுவதும் வற்றியவுடன் தேங்காய்ப் பூவைத் தூவி, நன்கு கிளறிவிட்டு இறக்கவும்.
சுவையான முள்ளங்கி புகாது தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இந்த குறிப்பினை அறுசுவைக்கு அளித்த திருமதி.மனோகரி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். மனோகரி மேடம் உங்கள் குறிப்புகள் அனைத்துமே அருமையோ அருமை. சுலபமாக, சில பொருட்களைக் கொண்டே செய்முறை உள்ளது. ஆனால் ருசிக்கு பஞ்சமில்லை.