பேச்சுலர்ஸ் மீன் குழம்பு

தேதி: January 22, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மனோகரி அவர்களின் பேச்சுலர்ஸ் மீன் குழம்பு குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மனோகரி அவர்களுக்கு நன்றிகள்.

 

மீன் - கால் கிலோ
மாங்காய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4 பற்கள்
புளி பேஸ்ட் - 2 தேக்கரண்டி
ரெடிமேட் சாம்பார் பொடி - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சோம்பு, வெந்தயம் - தலா ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு
உப்புத்தூள் - 2 தேக்கரண்டி


 

மீனைச் சுத்தம் செய்து துண்டுகள் போட்டுக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளவாட்டில் நறுக்கி வைக்கவும். புளி பேஸ்ட்டில் 2 கப் நீரைச் சேர்த்து அதில் சாம்பார் பொடி, மாங்காய்த் துண்டுகள், மஞ்சள் தூள் மற்றும் உப்புத் தூளைப் போட்டு கலந்து வைக்கவும்.
கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, சோம்பு, வெந்தயம் ஆகியவற்றைப் போட்டு வறுத்து, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
அனைத்தும் வதங்கியவுடன் புளிக் கலவையைச் சேர்த்து நன்கு கலந்து, உப்பைச் சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு நன்கு கொதித்து பச்சை வாசனை நீங்கியவுடன், மீன் துண்டுகளைச் சேர்த்து ஒரு கொதி வரவிடவும்.
கொதி வந்தவுடன் கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கி விடவும்.
சுவையான மீன் குழம்பு தயார்.

குழம்பு சற்று கெட்டியாக இருக்க வேண்டுமானால், சிறிது நீரில் ஒரு தேக்கரண்டி அரிசி மாவைக் கரைத்து மீனை போடுவதற்கு முன்பு ஊற்றி ஒரு நிமிடம் கொதித்த பிறகு மீனைப் போடலாம். மாங்காய் கிடைக்காவிட்டால் 2 தக்காளியைக் கரைத்து போடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரா இருக்கு மீன் குழம்பு. வாழ்த்துக்கள் கிச்சன் குயின்..

வருகைக்கும், வாழ்த்திற்க்கும் நன்றி தர்ஷா :-)

இந்த குறிப்பினை அறுசுவைக்கு அளித்த திருமதி.மனோகரி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். மனோகரி மேடம் இந்த மீன் குழம்பு செய்வதற்க்கு மிக சுலபமாக இருந்தது. அதிக சுவையுடன் இருந்தது. மீண்டும் நன்றிகள்.