உருளை பான்கேக்

தேதி: January 22, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. லாவண்யா அவர்களின் உருளை பான்கேக் என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய லாவண்யா அவர்களுக்கு நன்றிகள்.

 

உருளைக்கிழங்கு - 4
வெங்காயம் - 2
முட்டை - 3
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து அடித்து வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கைத் தோலுரித்து துருவி வைத்துக் கொள்ளவும்.
முட்டைக் கலவையுடன் உருளைக்கிழங்குத் துருவல் மற்றும் வெங்காயத்தைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
பிறகு அதனை தடிமனான சிறு தோசை போல் வார்த்து எடுக்கவும்.
சூடாக இருக்கும் போது மேலே சிறிதளவு வெண்ணெய் வைத்துப் பரிமாறவும். குழந்தைகளுக்கான எளிமையான ஸ்நாக் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கிச்சன் குயின் வாணிக்கு என் வாழ்த்துகள்.. உங்கள் குறிப்புகள் மிகவும் சூப்பர். அதும் இந்த கேக் ரொம்ப ரொம்ப சூப்பர் வாணி.. வாழ்த்துகள்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

எல்லா குறிப்புகளும் ரொம்ப நல்லா இருக்கு. என் பொண்ணுக்கு உருளை கிழங்கு, முட்டை ரொம்ப பிடிக்கும். கண்டிப்பா ட்ரை பண்றேன். வாழ்த்துகள் கிச்சன் குயின்.

அன்புடன்
பாரதி வெங்கட்

கிச்சன் குயின் வாணிக்கு என் வாழ்த்துகள்.. உங்கள் குறிப்புகள் மிகவும் சூப்பர்.

எல்லா குறிப்புகளும் சூப்பர். வாழ்த்துக்கள் கிச்சன் குயின்.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

இந்த சத்தான குறிப்பை வழங்கிய லாவண்யா அவர்களுக்கு மிக்க நன்றி.
இது குழந்தைகளுக்கு காலையும், மாலையும் கொடுக்கக் கூடிய சத்தான டிபன் என்றே சொல்லலாம். என் மகள் மிகவும் விரும்பி உண்டாள்.

ரேவதி, பாரதி, நிஷா மேடம், கிருஷ்ணமெர்ஸி அனைவரின் அன்பிற்க்கும், பாராட்டிர்க்கும் மிக்க நன்றி தோழிகளே. இந்த ரெஸிப்பி நிச்சயம் குழந்தைகள் விரும்பி உண்ணக் கூடியதே.