தேதி: January 22, 2015
பழைய டவல் - 2
ஊசி
நூல்
கத்தரிக்கோல்
படத்தில் காட்டியுள்ளபடி டவலினை இரண்டாக மடித்துப் போட்டு, இரண்டு அங்குல அளவு துண்டுகளாக நீளவாட்டில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

இதே போல் டவல் முழுவதையும் தனித்தனித் துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

அதில் மூன்று துண்டுகளை இணைத்து சடை பின்னுவது போல் பின்னிக் கொள்ளவும். இதே போல் மீதமுள்ள துண்டுகளையும் மும்மூன்றாக இணைத்து பின்னி வைக்கவும்.

பிறகு ஊசியில் நூலைக் கோர்த்துக் கொண்டு, ஒரு சடை பின்னலுடன் மற்றொரு பின்னலை இணைத்து வைத்து, அதன் ஓரங்களைச் சேர்த்து தைக்கவும். இதே போல் அடுத்தடுத்ததாக சடை பின்னல் துண்டுகளை இணைத்துத் தைத்துக் கொள்ளவும்.

அனைத்து துண்டுகளையும் இணைத்து தைத்த பிறகு, அதன் இரண்டு ஓரங்களையும் (வலது, இடது ஓரங்கள்) சரிசமமாக வெட்டிவிடவும். ஓரங்களில் பிசுறுகள் தெரியாமல் இருக்க மற்றொரு பழைய துணியை அதன் ஒரங்களில் வைத்து மடித்து தைக்கவும்.

அழகான மிதியடி தயார். இதற்கு அளவுகள் எதுவும் எடுக்க தேவையில்லை. மிதியடி செய்ய பயன்படுத்தும் டவல் 2 முழம் இருக்குமாறு எடுத்துக் கொள்ளவும்.

Comments
மூஸி
சூப்பர் மூஸி. உபயோகமான கைவேலை.
- இமா க்றிஸ்
முசி
ரொம்ப அழகா இருக்கு முசி.
செய்வதும் எளிது. :))
assalamu alaikkum musi
Romba alaga senjirukinga
musi
ரொம்ப சூப்பருங்க, அவசியமான உபயோகமான ஒன்று :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
முசி
சூப்பரான ஐடியாங்க!! நல்லாயிருக்குங்க வாழ்த்துக்கள்.... வேஸ்ட்டா போற எத்தனையோ துணிகளை உபயோகமுள்ளதா ஆக்க நல்ல ஒரு டிப்ஸ்...
Musi
சூப்பர் ஐடியா. உபயோகமான குறிப்பு வாழ்த்துக்கள் .
முஸி சிஸ்
அழகாக இருக்குது சிஸ். எங்கேயோ படித்த நியாபகம் இருக்குது. நன்றி.
வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!
நன்றி
அழகாக எடிட் செய்து வெளியிட்ட டீமிர்க்கு நன்றி.
முதல் பதிவிர்க்கும்,வாழ்திர்க்கும் நன்றி;இமாம்மா.
ரொம்ப நன்றி;நிகிலா.
வ அலைக்கும் சலாம்,நன்றி;ஷேக்நசீரா.
மிக்க நன்றி;வனி.
ஆமாம் வேஸ்ட்டா போற தடிமனான எந்த துணியிலும் செய்யலாம்.பதிவிர்க்கு நன்றி;அனு செந்தில்.
வாழ்த்திர்க்கு மிக்க நன்றி;தர்ஷா.
மார்க்கெட்டில் தடிமனான உள்ளன் துணியில் இது போல் விற்கிறார்கள்.அந்த ஐடியாவில் பழைய டவலில் செய்தேன்.நன்றி;கிரிஷ்ணாமெர்சி.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
முசி
முசி ரொம்ப ஈசியாகவும் அழகாகவும் உள்ளது.. மிகவும் பயனுள்ள குறிப்பு..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
job
intha thalathil nan eppdi valai saivathu plese telme
Hai dear Supera iruku and
Hai dear Supera iruku and rompa easyakavum iruku.thanks.
Super. Nanum try panren
Super. Nanum try panren
கல்யாணி
மிக்க நன்றி.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
லக்ஷ்மி
அவசியம் செய்து பார்த்து பதிவிடுங்க.நன்றி.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.