தேதி: January 23, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஜலீலா பானு அவர்களின் குழந்தைகளின் டானிக் என்கின்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஜலீலா அவர்களுக்கு நன்றிகள்.
பொட்டுக்கடலை - 50 கிராம்
நாட்டு சர்க்கரை - 25 கிராம்
பூவன் வாழைப்பழம் - இரண்டு
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

பொட்டுக்கடலையை கருகவிடாமல் இளஞ்சிவப்பாக வறுத்து எடுத்து ஆறவிடவும்.

ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடித்து, 2 மேசைக்கரண்டி அளவு எடுத்து கொள்ளவும். மீதமுள்ள பொட்டுக்கடலை மாவை ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.

பொட்டுக்கடலை மாவுடன் (மண் இல்லாத) நாட்டு சர்க்கரை மற்றும் பூவன் வாழைப்பழத்தைப் போட்டுப் பிசைந்து கொள்ளவும்.

சுவையும், சத்தும் நிறைந்த குழந்தைகளுக்கான டானிக் ரெடி. நாட்டு சர்க்கரை கிடைக்காவிட்டால் சாதாரண சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். இதை கொடுத்து சிறிது வெதுவெதுப்பான தண்ணீர் கொடுக்கவும்.

இதை குழந்தைகளுக்கு ஆறு மாதத்திலிருந்து எத்தனை வயது வரை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு இருமல் வந்தால் பொட்டுக்கடலை, சர்க்கரை, சிறிதளவு மிளகு திரித்து வைத்து சாப்பிட கொடுத்தால் சளி இருமல் சரியாகும்.
Comments
ஹேமா
சூப்பர் ஹெல்தி ரெசிபி. அருமையா இருக்கு.
எல்லாம் சில காலம்.....