சோயா வெஜ் குருமா

தேதி: January 23, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

0
No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. N.ஜெயலட்சுமி அவர்கள் வழங்கியுள்ள சோயா வெஜ் குருமா குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஜெயலட்சுமி அவர்களுக்கு நன்றிகள்.

 

சோயா பீன்ஸ் - ஒரு கப்
பீன்ஸ் - 5
கேரட் - ஒன்று
உருளைக்கிழங்கு - ஒன்று
பச்சை பட்டாணி - கால் கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மல்லித் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 4
இஞ்சி - ஒரு பெரிய துண்டு
தேங்காய் - 2 கீற்று
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பட்டை - ஒரு துண்டு
லவங்கம் - 2
ஏலக்காய் - 3
கசகசா - ஒரு தேக்கரண்டி
வெள்ளை எள் - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிது
ஆலிவ் ஆயில் - 2 மேசைக்கரண்டி
கடுகு எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

முதல் நாள் இரவே சோயா பீன்ஸில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
வெங்காயம், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பூண்டு, இஞ்சி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஊற வைத்த சோயா பீன்ஸை எடுத்து குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும். அதே போல் பட்டாணியையும் வேக வைத்து எடுக்கவும்.
வெறும் வாணலியில் கசகசா, வெள்ளை எள், ஏலக்காய் மூன்றையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்தவற்றை மிக்ஸியில் போட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு, பாதி வெங்காயம் சேர்த்து மைய அரைக்கவும்.
தக்காளியை தனியாக அரைத்து வைக்கவும்.
தேங்காய், சோம்பு சேர்த்து தனியாக அரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்த கலவையை ஊற்றி மீண்டும் வதக்கவும்.
அதனுடன் அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.
நன்கு வதங்கி வாசனை வந்த பிறகு நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளைப் போட்டுக் கிளறவும். அதனுடன் உப்பு, மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்துக் கிளறவும்.
காய்கறிக் கலவை கொதித்து பச்சை வாசனை போனதும் 2 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும்.
10 நிமிடம் கழித்து காய்கள் வெந்ததும் வேக வைத்த சோயா பீன்ஸ் சேர்த்து, தேங்காய், சோம்பு சேர்த்து அரைத்த விழுதுடன் மேலும் அரை கப் தண்ணீர் ஊற்றி கலந்து கலவையில் ஊற்றி கிளறி மூடி வைக்கவும்.
2 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.
சுவையான, ஆரோக்கியம் நிறைந்த சோயா வெஜ் குருமா தயார்.

சோயா பீன்ஸ் பிடிக்காதவர்களும் விரும்பி உண்பர். ( சோயா வேகவைத்த பிறகும் கிரன்சியாகதான் இருக்கும் )


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கிச்சன் குயினுக்கு வாழ்த்துக்கள். குறிப்புகள் வழக்கம் போல‌ சூப்பர்.குருமா அருமை ஹேமா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

கிச்சன் குயின் ஹேமாவிற்கு வாழ்த்துகள்.. அனைத்து படங்களும் ரொம்ப அழகாக உள்ளது.. கலக்குங்க.. வாழ்த்துகள்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்