maatu paal kodukkalaama

Hi friends

Pirandhu 10 naal aana kuaindhaikku maatu paal kodukkalaama. Lactogen dhaan kodukanuma.

Ipo maatu palil irundhu lactogen ku maaralaama. Anubavam ulla tholigal udhavavum. Nanri.

Neenga kutty paiyan ku mattu pal ah kodukalam nan en paiyan pirantha 3day la irrunthu kuduthan...first kuduthu parunga kutty paiyan ku loose motion pogala na mattu pal ah continue panunga...lactogen venam.lactogen la entha sathum illai...

hi kavi..babyku 1 yr varaikum cow milk kutukka kutathunu dr en ponnuku sonnangga...neengga payyanuku feed pannungga pa athu thaan baby ku nallathu..illana dr ta consult panni formula milk kalathu kutungga ithu best pa..cow milk sila babies ku othukkathu...

எல்லாம் நன்மைக்கே

//lactogen venam.// இப்படிச் சொன்னது பரவாயில்லை. lactogen la entha sathum illai...// சரியாத் தெரியாம சொல்லாதீங்க திவ்யா. :-))

நீங்க லாக்டோஜன் கொடுக்கல. அப்படியானால் உங்களுக்கு எப்படி அது சரியில்லை என்று தெரிய வரும்!!! உங்களுக்கு லாக்டோஜன் பற்றிய அனுபவம் இல்லை. தெரியாமல் கருத்துச் சொல்லி மற்றவர்களைக் குழப்பப்படாது. உங்க அனுபவத்தில அறிஞ்சதைச் சொல்லலாம். அதுதான் சரியான விடயம்.

என் பையன்கள்... மூத்தவர் வைத்திய ஆலோசனையின் பேரில் (என் உடல்நிலை கருதி) முதல் மாத்தின் பின் முழுக்க முழுக்க லாக்டோஜன்லயேதான் வளர்ந்தார். இரண்டாமவர் குறைமாதக் குழந்தை. நான் வேலைக்குப் போகும் சமயம் எல்லாம் லாக்டோஜன் குடிச்சு தான் வளர்ந்தார். அப்போல்லாம் பால் பம்ப் செய்து வைக்கும் வசதி இருக்கவில்லை. எங்க ஊர்ல பசுப்பால் கிடைக்கவும் மாட்டுது. இருவருமே ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார்கள். //lactogen la entha sathum illai...// என்றால் எப்படி இது சாத்தியம்! டாக்டர்கள்தான் இதைப் பரிந்துரைப்பார்களா? அந்தக் கம்பெனி இத்தனை வருஷத்துக்கு ஓடிட்டு இருக்கிறது எப்படி!! வேலை பார்க்கும் எத்தனை தாய்மார் அதைக் கொடுத்து குழந்தை வளர்த்திருக்கிறோம்.

தாய்ப்பால்தான் சிறந்தது. இன்றைய காலகட்டத்தில் அதை மட்டும் நம்பியிருந்தால் குழந்தைக்குப் போதுமான உணவு கிடைக்காது. தேவையானால் சரியான விகிதத்தில் நீர் சேர்த்து ஐதாக்கிய பசுப்பாலோ, லாக்டோஜனோ அல்லது வேறு பொருத்தமான பாலோ, குழந்தையின் உடல் ஏற்றுக் கொள்வதைப் பொறுத்துக் கொடுக்கலாம். பசுப்பால் கொடுப்பதில் சில சிக்கல்கள் இருக்கிறது. பசு சாப்பிடும் உணவைப் பொறுத்து பால் சுவை மாறும்; வாசனையும் மாறும். வீட்டிலேயே பசு இருந்தால் இந்தப் பிரச்சினை இல்லை; சுத்தம் பற்றிய பயமும் இராது. மற்றது... பாலை ஒவ்வொரு தடவையும் பெரியவர்கள் யாராவது சுவை பார்த்துவிட்டு ஊட்டுவது நல்லது. கெட்டுப் போகவில்லை என்பது நிச்சயம் தெரியும்.

எந்தப் பாலைக் கொடுப்பதானாலும் சரி, கூடவே சரியான வயதில் திட ஆகாரங்களையும் அறிமுகப்படுத்துவது அவசியம்.

~~~~~~~~~~~~
இது கவிக்கு
//10 naal aana kuaindhaikku maatu paal kodukkalaama.// பத்தே நாள்தானே! உங்கள் பால் போதாவிட்டால் அல்லது உங்கள் உடல்நிலை பாலூட்ட இடமளிக்காவிட்டால் பசுப்பால் கொடுக்குமுன் குழந்தையின் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். முன் காலத்திலெல்லாம் நிறையப் பேர் பசுப்பாலேதான் கொடுத்திருக்கிறார்கள். அதற்கென்று முறை இருக்கிறது. பேசிப் பாருங்கள். நீங்களாகக் கொடுக்க வேண்டாம். கூட அம்மா, அத்தை இருந்து கவனிக்கிறார்களா? அவர்களது அபிப்பிராயம் என்ன? உங்களுக்குப் பால் சுரப்பது போதவிலையென்றால்.. பாலூட்டும் முன் நீங்கள் ஒரு கோப்பை பால் குடித்துவிட்டுக் கொடுக்கலாம். பால் சுரப்பை அதிகரிகக் கூடிய உணவுவகைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

‍- இமா க்றிஸ்

Karuthukalukku nandri.

--

மன்னிக்கவும் இமா அம்மா..எனது அண்ணிமார்கள் அவர்களின் குழந்தைக்கு குடுத்த போது சொன்னார்கள்..லேடொஜினின் எந்த சத்தும் இல்லை என்று அதை வைத்து தான் நான் எனது கருத்து சொன்னேன்...தவறாக சொன்னதுக்கு மன்னிக்கவும்....

:-) எந்தச் சத்தும் இல்லாதது... நீர் மட்டும்தான். அதில் கூட கனியுப்புக்கள் இருக்கும். :-)

//எனது அண்ணிமார்கள் அவர்களின் குழந்தைக்கு குடுத்த போது// ம்.. அவர்கள் குழந்தைகள் இப்போது ஆரோக்கியமாக நன்றாகத் தானே இருக்கிறார்கள் கண்ணா! வெறுமையாக எதுவும் இல்லாத ஒன்றை அவர்கள் கொடுக்க, அவர்களது குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்தனவென்கிறார்களா? ஆமாம், ஒரு அண்ணி கொடுத்தார், இரண்டாவது அண்ணியுமா ஒன்றுமில்லாததைக் கொடுத்தார்? :-) ஆளுக்கு ஆள் சொல்லிக் கொடுக்காமல் உங்களுக்கு மட்டும் அட்வைஸ் பண்ணினாங்களா? :-)

'அதில் ஒன்றுமில்லை,' என்னாமல், இன்ன கெடுதல் ஆகும், இன்னின்னது மைனஸ் என்று எழுதியிருந்தீர்களானால்... ஓகே, கொஞ்சம் யோசித்திருப்பேன் நானும்.

எல்லோரும் எல்லாம் சொல்லுவாங்கதான். சில சமயம்... நாமாக அனுபவிக்காததை மற்றவர்களுக்குச் சொல்லுவது தவறாகி விடும்.

ஒரு ரகசியம் சொல்லட்டுமா... இமா கூட லாக்டோஜன் பேபிதான். ;)

//தவறாக சொன்னதுக்கு மன்னிக்கவும்....// கர்ர்.. ;)) அது எல்லாம் ஒன்றும் வேணாம். எனக்கு இதுல நஷ்டம் எதுவும் இல்லை. உங்கள் மேல் கோபமும் இல்லை. :-)

இனிக் கவனமா இருங்க. அறுசுவைல மட்டுமில்ல, உங்க சொந்த வாழ்க்கைலயும்... மற்றவங்க சொல்ற அட்வைஸ்லாம் அப்பிடியே எடுத்துக்காம, நீங்களா யோசிச்சுப் பார்க்கணும். இல்லாட்டா அது அதுக்கதுக்குன்னு உள்ளவங்கள்ட்ட ஆலோசனை எடுத்துக்கணும். சில சமயம் வீட்ல அம்மாவுக்குக் கூட சரியானது சொல்லத் தெரியாது. அவங்க இருந்த காலம் வேற, இது வேறு காலம். கவனமா இருங்க.

‍- இமா க்றிஸ்

மற்றதெல்லாம் இமா சொல்லிப்புட்டாங்க, எனக்கு ஒன்னும் விட்டுவைக்கல லேக்டோஜன் பேபி ;)

மக்களே... பசும்பால் பிள்ளைக்கு நல்லது தான். ஆனா எப்போ?? அந்த காலத்தில்!! நம்ம அம்மாவெல்லாம் சின்ன பிள்ளையா இருந்தபோது. இப்போ அது பால்... வெறும் பால்னு தான் சொல்லணும். பசும்பால் சுத்தமா நமக்கு கிடைக்கிறதில்லை. அது வெளியில் வந்து சைக்கிளில் ஊத்துறவங்களாகட்டும், பாக்கட் பாலாகட்டும். கலப்படமா தான் இருக்கு என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் தான் இப்போ மருத்த்வர்கள் அதை பிள்ளைகளுக்கு கொடுக்க சொல்வதில்லை. முக்கியமா 1 வயது கூட ஆகாத பிள்ளைக்கு பசும்பால் ஜீரணத்துக்கு உதவாது. 1 வயதுக்கு மேல் கூட நீர் கலந்து தான் கொடுக்க சொல்வாங்க மருத்துவர்கள்.

லேக்டோஜன், நெஸ்டம் அது இதுன்னு ஏகப்பட்டது இருக்கு புட்டி பாலில். அதில் எல்லாவற்றையும் எல்லா மருத்துவரும் பரிந்துரைப்பதில்லை. உங்க பிள்ளைக்கு எது சேருதுன்னு முதல்ல 1 வாரம், 10 நாள் கொடுத்து பார்த்து தான் முடிவு பண்ண முடியும். என் பிள்ளைகள் தாய் பால் தான் குடிச்சாங்க... சம வீக் சத்து குறைபாடு, இமியூன் பவர் இல்லை. ஏன்னா நானே வீக்கா இருந்தேன். அதுக்காக தாய் பால் சத்தில்லாததுன்னு சொல்ல முடியாது தானே? சொன்னா உலகமே உதைக்கும் என்னை ;) என் தங்கை மகள் புட்டிபாலில் வளர்ந்தா... இவங்களை விட அவ எவ்வளவோ பெட்டரா தான் இருக்கா. அதுக்காக அது தாய்பாலை விட உயர்ந்ததும் இல்லை.

குழபுறேனோ??? என்ன சொல்ல வரேன்னா... இது சரியா அது சரியான்னு மனசை போட்டு குழப்பாம மருத்துவர் சொல்றதை ட்ரை பண்ணுங்க. பசும்பாலை விட இந்த புட்டிபால் எவ்வளவோ சேஃப் தான் இந்த காலத்தில்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

En baby ku dexolac kudukka sonnanga doctor.pirantha 1st nal muthal.enaku pal surappu illai athanal.avan arokyamathan irukan.ethuvum dr kitta consult panni seiunga

Hi imma amma, sathya, vanivasu

Thanks for your comments. Enakku delivery panna dr Pasum paal lactogen edhuvum suggest panala. Thaai paal iladhadhu nala adha sari pana advice and tablets kuduthaanga. Kulaindhai nala dr kita dhaan idha pathi kekanum.

--

கவி நேற்று நான் டாக்டரிடம் கன்சல்ட் பண்ணினேன். எனக்கும் பால் சுரப்பு குறைவாக இருக்கு.டாக்டர் என்னிடம் லேக்டோஜன் கொடுக்க சொன்னாங்க.நீங்களும் கன்சல்ட் பண்ணுங்கள். பால் அதிகமாக குடித்தாலும் பால் சுரக்கும்னு சொன்னாங்க. ..

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்