பீன்ஸ் தக்காளி கூட்டு

தேதி: January 26, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. நர்மதா அவர்களின் பீன்ஸ் தக்காளி கூட்டு குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய நர்மதா அவர்களுக்கு நன்றிகள்.

 

பீன்ஸ் - 500 கிராம்
தக்காளி - 2
ஒலிவ் ஆயில் - 3 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று
பூண்டு - 3 பல்
தண்ணீர் - அரை கப்
உப்பு
மிளகுத் தூள்
கொத்தமல்லித் தழை


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.
பெரிய வெங்காயம் மற்றும் பூண்டை நீளமான மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பீன்ஸை விரல் நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டைப் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் பீன்ஸை சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேக விடவும்.
பீன்ஸ் நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும் உப்பு, மிளகுத் தூள் சேர்த்து கிளறி மூடி 5 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்திருந்து இறக்கவும்.
சுவையான பீன்ஸ் தக்காளி கூட்டு தயார். கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரான குறிப்பு வழக்கமா பீன்ஸ்ல பொரியல் தான் செய்வோம் சாப்பிடவே பிடிக்காது இது மாதிரி செய்தால் சாப்பிட பிடிக்கும்னு நினைக்கிறேன் செய்து பார்த்து சொல்றேன் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

//சூப்பரான குறிப்பு வழக்கமா பீன்ஸ்ல பொரியல் தான் செய்வோம் சாப்பிடவே பிடிக்காது இது மாதிரி செய்தால் சாப்பிட பிடிக்கும்னு நினைக்கிறேன் செய்து பார்த்து சொல்றேன் :)// நீங்க‌ சொல்வ‌து உண்மை தான் சுவா. அது தான் வித்தியாசம‌ இருந்த்துன்னு செய்து பார்த்தேன். டேஸ்ட் நல்லா இருந்தது. செய்துட்டு சொல்லுங்க‌.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

குறீப்பினை கொடுத்த‌ திருமதி.நர்மதா அவ்ர்களுக்கும், வெளியிட்ட‌ டீமிற்க்கும் எனது நன்றிகள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....