கேப்சிகம் பச்சடி

தேதி: January 26, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. விஜி அவர்களின் காப்சிகம் பச்சடி குறிப்பு, இங்கே விளக்கப்படங்களுடன் செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய விஜி அவர்களுக்கு நன்றிகள்.

 

பெரிய கேப்சிகம் - ஒன்று
தயிர் - ஒரு கப்
தாளிக்க:
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுந்து - கால் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - ஒன்று
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - 4 இலைகள்
உப்பு - கால் தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிது


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
குடைமிளகாயை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை அதில் சேர்த்து நன்கு வதக்கவும்.
குடைமிளகாய் நன்கு வதங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு தயிரை சேர்க்கவும்.
பச்சடியை கிண்ணத்திற்கு மாற்றி மேலே கொத்தமல்லித் தழை தூவவும். சுவையான கேப்சிகம் பச்சடி ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கலர்ஃபுல் பச்சடி அருமை :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எல்லா குறீப்புலேயும் உங்கள் பதிவைப் பார்க்கிறதுக்கு ரொம்ப‌ சந்தோசமா இருக்கு சுவா. நன்றி.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

குறிப்பினை வெளியிட்ட‌ அறுசுவை குழுவினருக்கும் குறிப்பினைக் கொடுத்த‌ விஜி அவர்களுக்கும் எனது நன்றிகள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ரொம்ப‌ கலர் ஃபுல்லா அழகா இருக்கு சுமி. வாழ்த்துக்கள்.

அன்புடன்
பாரதி வெங்கட்

உங்கள் வாழ்த்துக்கு எனது நன்றிகள் பாரதி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....