தேதி: January 27, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட, திருமதி. ஆனந்தி சோமசுந்தரம் அவர்களின் வெஜிடபிள் சூப் குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஆனந்தி அவர்களுக்கு நன்றிகள்.
காரட், பீன்ஸ், கோஸ், காலிஃப்ளவர் - 200 கிராம்
வெங்காயம் - கால் பாகம்
எண்ணெய், நெய் - அரை தேக்கரண்டி
மைதா - ஒன்றரை தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
சோள மாவு - 2 தேக்கரண்டி
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - தேவைக்கு
காய்கறிகளைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சோள மாவுடன் சிறிது பால் சேர்த்து கரைத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய், நெய் விட்டுக் காய்ந்ததும் மைதாவைப் போட்டு லேசாக பிரட்டி அதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

அதன் பிறகு நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.

காய்கறிகள் வதங்கியதும் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், சோள மாவுக் கரைசல் ஊற்றி, உப்பு சேர்த்து நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்

கொத்தமல்லித் தழை, மிளகுத் தூள் சேர்த்து பரிமாறவும். ஹெல்தி வெஜிடபுள் சூப் தயார்.

Comments
நன்றி @ வெஜிடபுள் சூப்
எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி.
குறிப்பை வழங்கிய ஆனந்தி சோமசுந்தரம் அவர்களுக்கும் நன்றி..
என்றும் அன்புடன்,
கவிதா