கொத்துக்கறி மசாலா(பேச்சுலர்ஸ்)

தேதி: January 27, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட, திருமதி. சரஸ்வதி அவர்களின் பேச்சுலர்ஸ்கான கொத்துக்கறி மசாலா குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சரஸ்வதி அவர்களுக்கு நன்றிகள்.

 

மட்டன் கொத்துக்கறி - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு, சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 50 மி.லி
சோம்பு, சீரகம் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு


 

கொத்துக்கறியை நன்கு வடித்தட்டில் வைத்து அலசி தண்ணீர் வடித்து வைக்கவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை நறுக்கி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றை போட்டு தாளித்து கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வதக்கியவற்றுடன் கொத்துக்கறியை சேர்த்து வதக்கவும்.
பிறகு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள், தக்காளி, உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
வெந்து தண்ணீர் வற்றி வரும் போது மிளகு, சீரகத் தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
சுவையான மட்டன் கொத்துக்கறி மசாலா தயார்

விருப்பப்பட்டால் தேங்காய் துருவலை கடைசியில் சேர்த்து சிறிது நேரம் கிளறி இறக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப ஈசி செய்முறையா இருக்கு கவிதா. அடுத்தமுறை கொத்துகறி வாங்குகையில் இந்த டிஷ் செய்துப் பார்க்கிறேன்.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி.
குறிப்பை வழங்கிய சரஸ்வதி அவர்களுக்கும் நன்றி..

என்றும் அன்புடன்,
கவிதா

வாணி,
ட்ரை பண்ணிட்டு சொல்லுங்கோ..
வாழ்த்திற்கும்,வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா