ப்ரெஷ் வெஜிடபுள் ஊறுகாய்

தேதி: January 27, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட, திருமதி. ஜுலைஹா அவர்களின் ப்ரெஷ் வெஜிடபிள் ஊறுகாய் குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஜுலைஹா அவர்களுக்கு நன்றிகள்.

 

காலிஃப்ளவர் - 50 கிராம்
பீன்ஸ் - 50 கிராம்
கேரட் - 50 கிராம்
கோஸ் - 50 கிராம்
பச்சைமிளகாய் - 2
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
சன்ஃப்ளவர் ஆயில் - அரை தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

காலிஃப்ளவர், கேரட், கோஸ், பீன்ஸை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். கடுகை பொடி செய்துக் கொள்ளவும்.
ஒரு பவுலில் காய்கறிகளை போட்டு எண்ணெய், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலக்கவும்.
காய்கறிக் கலவையுடன் கடுகு பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.
தேவையெனில் பாதியளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும். ப்ரெட் சண்ட்விச், சப்பாத்தி ரோல் உள்ளே வைக்க ஏற்ற ஸ்டஃபிங். ஒரு வாரம் வரை பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி.
குறிப்பை வழங்கிய ஜுலைஹா அவர்களுக்கும் நன்றி..

என்றும் அன்புடன்,
கவிதா