முகத்தில் மரு

முகத்தில் மிகச் சிறிய அளவில் கருப்பாக மரு போல் (5 or 6 )உள்ளது. அதை எப்படி நீக்குவது?

டியர் வினோதா எனக்கு தெரிந்தவரையில் மருக்களை ஸ்பிரிட்டைக் பஞ்ஜினால் தொட்டு அதன் மீது தடவிவந்தால் நாளடைவில் விழுந்து விடும். சிலர் தலை முடியை கொண்டு இருக்கமாக கட்டி வைத்து விடுவார்கள்.அதுவும் அவ்வாறே விழுந்து விடும். ஆனால் முகத்தில் உள்ள சிறிய மருக்களை அகற்ற நீங்கள் எதர்க்கும் அழகுக்கலை நிபுணரைச் சந்தித்து ஆலோசனைப் பெறுவது தான் நல்லது என்று நினைக்கின்றேன்.நன்றி.

நன்றி Manohari Mam.

மேடம் முருகன் கோவிலில் உப்பும் மிளகும் போட்டால் சரியாகிவிடும் என்கிறார்களே அது எந்த அளவிற்கு உண்மை?

--Chandru

******அன்பே சிவம்******

டியர் சந்துரு, உப்பையும் மிளகையும் முருகன் கோவிலில் மட்டுமல்ல மாதா கோவிலிலும் போடுவதை பார்த்திருக்கின்றேன். என்னைப் பொருத்தவரையில் இவையெல்லாம் ஒரு நம்பிக்கை அவ்வளவு தான்.மொட்டை அடித்த பிறகு மீண்டும் முடி வளராது என்று தெரிந்தால் யாராவது மொட்டை அடிப்பார்களா?ஒரு மாதத்தில் மீண்டும் வளர்ந்து விடும் என்ற நம்பிக்கை தான் காரணம்.நம்பிக்கை இருக்க வேண்டும் அதற்க்காக எல்லாவத்தையும் அவன் பார்த்துக் கொள்வான் என்று மூன்று வேளையும் சாமியை மட்டும் கும்பிட்டுக் கொண்டிருந்தால் வாழ்க்கை தோல்வியில் தான் முடியும்.சந்நியாசிகளுக்கு வேண்டுமானால் அவை ஒத்து போகும்.ஆகவே உப்பையும் மிளகையும் கோவிலுக்கு போட்டு விட்டு பரிகாரம் தேடாமல் இருந்தால் நிச்சயம் பலன் இருக்காது.பிறக்கும் போதே சிலருக்கு இது போன்ற மருக்கள் இருக்கும். அவர்கள் எவ்வளவு தான் மூட்டை மூட்டையாய் உப்பு மிளகு போட்டாலும் அவை போகாது. மருத்துவரிடம் காட்டி அறுவைச் சிகிச்சையில் தான் அவற்றை அகற்ற முடியும்.
ஆகவே நம்பிக்கை தான் கடவுள். நம்பிக்கை தான் இது போன்ற பரிகாரங்கள் செய்வதர்க்கும் காரணமே ஒழிய இது உண்மை அல்ல என்பது தான் என் கருத்து. நன்றி.

வெங்காயச் சாற்றுடன் இஞ்சி சாறு கலந்து பூசினால் சிறிய மருக்கள் உதிரும்

மிக்க நன்றி Sugu. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். System problem. ஆதலால் உடன் பதில் எழுத முடியவில்லை.

நலமா? குழந்தை நலமா?

குழந்தை நலம். நாங்கள் அனைவரும் நலம். அங்கு அனைவரின் நலமறிய ஆவல். நன்றி.

நாங்கள் அனைவரும் நலம் .கேட்டதற்கு மிகவும் நன்றி.

naan vengaayam ingee seidhu parkiraen

மேலும் சில பதிவுகள்