admin அவர்களுக்கு

எனது பயனீட்டாளர் பெயரை வினோ2000 என்பதற்க்குப் பதிலாக வினோ அல்லது வினோதா என்று மாற்ற முடியுமா? (என்னுடைய பதிவுகள் அனைத்தும் அப்படியே இருக்க வேண்டும்.)

வினோதா என்ற பெயரில் ஏற்கனவே ஒருவர் பதிவு செய்து உள்ளதால், தங்களுக்கு வினோ (vino) என்று பெயர் மாற்றம் செய்துள்ளேன். (உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அப்படியே இருக்கும். கவலைவேண்டாம்.)

நன்றி admin.

திரு அட்மின் அவர்களுக்கு, உறுப்பினர் விபரங்களை புதியதாக தமிழில் பதித்துள்ளேன், அதேப் போல் ஆங்கிலத்தில் உள்ள எனது பயனீட்டாளர் பெயரையும் தமிழில் மாற்ற வேண்டும். ஆகவே தயவுச் செய்து மனோகரி என்று தமிழில் மாற்றி விடும்படி கேட்டுக் கொள்கின்றேன்.நன்றி.

மிகவும் சந்தோசம். தங்களது (திடீர்) தமிழ் ஆர்வத்திற்கு தலைவணங்குகின்றேன் :-)

பயனீட்டாளர் பெயரை தமிழில் வைத்துக்கொள்வது பாராட்டப்பட வேண்டிய விசயம் என்றாலும், அது நான் பரிந்துரைக்கும் விசயம் அல்ல. பெயர்ப்பதிவு பக்கத்திலேயே அதனை நான் குறிப்பிட்டுள்ளேன். பயனீட்டாளர் பெயரை தமிழில் கொடுக்க இயலும் என்றாலும் ஆங்கிலத்திலேயே கொடுங்கள் என்று ஆலோசனை கூறியிருப்பேன். அதற்கு சில காரணங்கள் உண்டு.

1. எகலப்பை போன்ற மென்பொருட்களை நிறுவி நீங்கள் நேரிடையாகவே தமிழில் டைப் செய்ய இயலும் என்றால் கொஞ்சம் எளிதாக இருக்கும். எழுத்துதவி பக்கம் போன்றவற்றை உபயோகப்படுத்திதான் தமிழில் டைப் செய்கின்றீர்கள் என்றால் கொஞ்சம் கடினம். உங்கள் கணினியை விடுத்து வேறு ஏதாவது கணினியை பயன்படுத்தும் சூழ்நிலையில், தமிழில் டைப் செய்ய வசதி இல்லாமல் சிரமப்பட நேரிடலாம்.

2. அறுசுவை தமிழ் தளத்தில் பெயர்ப்பதிவு செய்துள்ள உறுப்பினர்கள், அறுசுவை ஆங்கிலத்தளம் வெளியானதும் அதற்கும் தனியாக பெயர்ப்பதிவு செய்யவேண்டியதில்லை. இதே பெயர்ப்பதிவு போதுமானது. ஆங்கிலத்தளம் மட்டுமல்லாமல் மற்ற இந்திய மொழித்தளங்களுக்கும் இது ஒன்றே போதுமானது. ஆங்கிலத்தளத்தினை தமிழ் அறியாதோர் ஏராளமானோர் பார்வையிடுவர் என்பதால், அங்கே உங்கள் பெயர் தமிழில் இருந்தால் எல்லோராலும் படிக்க இயலாமல் போகலாம்.

3. சரி. நான் ஆங்கிலத்தளம் பக்கமே வரவில்லை என்று ஒருவேளை நீங்கள் சொன்னாலும், ஆங்கிலத்தளத்தில் Manohari என்று புதிதாக ஒருவர் பெயர்பதிவு செய்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். அவர் தமிழ் தளத்திற்கு வருகை புரியும்போது, இரண்டு மனோகரிகள் என்பது பார்வையாளர்களுக்கு குழப்பத்தை உண்டு பண்ணலாம்.

நீங்கள் குறிப்புகள் கொடுப்பவர் என்பதால், உங்கள் பெயர் ஆங்கிலத்தில் இருப்பதுதான் நல்லது என்பது என்னுடைய ஆலோசனை. எப்படியும் நீங்கள் தமிழில் கொடுத்துள்ள குறிப்புகளை மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் வெளியிடுவோம். அப்போது தங்கள் பெயர் தமிழில் இருந்தால் நன்றாக இருக்காது.

எதுவாயினும் பரவாயில்லை.. தமிழிலேயே இருக்கட்டும் என்று நீங்கள் வலியுறுத்தினால் மாற்றுவதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. ஒரு நிமிட வேலைதான்.

சரிங்க அட்மின், நீங்கள் கூறுவதைப் பார்த்தால் பயனீட்டாளர் பெயர் ஆங்கிலத்தில் இருப்பது தான் நல்லதென்று நானும் நினைக்கின்றேன். ஆகவே எனதுப் பெயர் ஆங்கிலத்திலேயே இருக்கட்டும் மாற்ற வேண்டாம். ஆலோசனைக்கு மிகவும் நன்றி.

Last month i sent one type of preparation,again i will say how to prepare soft idly.
soke - Take 2 cup of idly rice,2 cup of boiled ponni rice,1 cup of urad doll and 1 t-spoon of fenugreek seeds.soke rice together and doll,seeds together for 3 hours.
grand rice and doll&seeds separately.then add needed salt then mix all well (use your hand).leave for 1 day then prepare idly.it will come out well.

Its an excellent site to all house wives

திரு அட்மின் அவர்களுக்கு, திருமதி தளிகா அவர்கள் ஒரு குழந்தையின் அகால மரணம் குறித்த நெஞ்சை உறுக்குகின்ற செய்தியும், மரணத்திற்க்கான காரணம் குறித்த விழிப்புணர்வை குறித்த செய்தியும் மன்றத்தில் பதித்துள்ளார்கள்.அவர்கள் பதித்துள்ள செய்தி, இடம்பெற்றுள்ள தலைப்பைப் பற்றி கூற தான் இதை உங்களுக்கு எழுதுகின்றேன்.

அதாவது அவை குழந்தைகளின் ஆரோக்கியம் என்ற இடத்தில் இடம்பெற்றுள்தால் அதை அதற்க்கு பதிலாக தாங்கள் மன்றத்தில் அறுசுவை இணையத்தளம் என்ற பொதுவான விசயங்கள் அடங்கியுள்ள இடத்தில் அவர்களின் பதிவை பதிக்க முடியுமா என்று கூறவும்.அல்லது இதைப் பற்றி தங்களின் கருத்தைக் கூறும்படி கேட்டுக் கொள்கின்றேன்.நன்றி.

anbudan

if u use natco brand of broken urid dhal, u can take half cup of urid dhal for two cups of raw rice and two cups of par boiled rice. i am in uk and if i use one cup of urid dhal idli is not coming well.so its better to add half cup of urid dhal.prepare asusual.

thank you.
Vidyavasudevan.

anbudan

அன்புள்ள அட்மின் அண்ணா அவர்களுக்கு,
1.இங்கே மன்றத்தில் உள்ள கேள்வி பகுதியில் எல்லவற்றிற்கும் புதிய புதிய தலைப்பு போடுவது சரியல்லவே!
2.மேலும் ஒரு கேள்வி மட்டுமே உள்ள தலைப்புகளை நீக்குவதோ அல்லது அதனோடு தொடர்புடைய வற்றிலே சேர்த்து விடுங்களேன்.
இது நேரத்தை அதிகமாக்குவதுடன் இடத்தையும் ஆக்கிரமிக்கிறது.

கவனிப்பீர்களா?

அன்பு சகோகதரிக்கு,

நான் தங்களது வேண்டுகோளை சரியாக புரிந்துகொண்டேனா என்பது தெரியவில்லை. தலைப்பு கொடுப்பதினால் இடம் கொஞ்சம் எடுத்துக்கொள்ளும். உண்மைதான். ஆனால், அதனால் சில நன்மைகளும் உள்ளன. விசயம் எதைப்பற்றியது என்பதை தலைப்பில் நாம் தெரிவிக்க முடியும். சமீபத்தியக் கருத்துக்கள் போன்றவற்றில் தலைப்புகளை பட்டியலிட முடியும். அதுவுமில்லாமல் மேலும் கீழும் உள்ள பதில்களைப் பிரித்து காட்டுவதற்கும் தலைப்பு உதவும்.

மன்றத்தில் ஒரு கேள்வி மட்டும் உள்ள பதிவுகளை நீக்குதல் நன்றாக இருக்காது. கேள்விகளுக்கு எந்த நேரத்திலும் பதில் கிடைக்கலாம். ஒரு வருடம் கழித்து கூட சில கேள்விகளுக்கு பதில்கள் வந்துள்ளன. (அப்படி கேள்வி மட்டும் உள்ள பதிவுகளை எல்லாம் தேடி எடுத்து யாராவது அதற்கு பதில் கொடுங்களேன். ப்ளீஸ்..)

உங்கள் கருத்துக்களை ஒதுக்கவில்லை. கண்டிப்பாக யோசிக்கின்றேன். அவசியம் இதை செய்தாக வேண்டும் என்ற நிலை வருமாயின் உடனே செய்துவிடலாம்.

மேலும் சில பதிவுகள்