மைக்ரோவேவ் அவன் வேலை செய்யவில்லை

எனது அவன் IFB Model 23 sc3 ‍‍‍ timer ஐ என் குழந்தை ஆன் பண்ணி விட்டாள். இப்ப‌ என்ன பண்ணினாலும் ஸ்டார்ட் குடுத்தா ஸ்டார்ட் ஆக‌ மாட்டேங்குது.மைக்ரொவேவ் ஹை, க்ரில்,காம்பினேஷன்ஸ் எதாவது ப்ரெஸ் பண்ணினா மட்டும் செலக்ட் ஆகுது.ஆனா ஸ்டார்ட்,ஸ்டாப்,ரீசெட் எதுவும் பண்ண‌ முடியல‌. என்ன‌ செய்வது? தோழிகள் உதவுங்களேன்..ப்ளீஸ்.

க்ளியர் பட்டன் இல்லையா? இருந்தால் ப்ரெஸ் பண்ணிப் பாருங்க.

ஒரு தடவை மைக்ரோவேவை மெய்ன்ல ஆஃப் (அல்லது அன்ப்ளக்) செய்து விட்டு மீண்டும் போட்டுப் பாருங்கள். அனேகம் சரி வரும். அப்படியும் இதே பிரச்சினை இருந்தால்... மானுவலைப் படித்துப் பாருங்கள். சரி செய்ய வழி சொல்லியிருப்பார்கள். மானுவல் கிடைக்காவிட்டால்... அந்த மாடலைக் குறிப்பிட்டு இணையத்தில் மானுவலைத் தேடிப் பாருங்கள். நிச்சயம் பதில் கிடைக்கும்.

‍- இமா க்றிஸ்

இமா..
பதில் அளித்தமைக்கு நன்றிங்க‌.. க்ளியர் பட்டன் இல்ல‌,ஆனா ரீசெட் பட்டன் இருக்கு. அதை ப்ரெஸ் பண்ணவே முடியல‌, ஏதோ லாக் ஆன‌ மாதிரி.அன்ப்ளக் பண்ணி பாத்துட்டேன். இன்னும் மானுவல் பாக்கல‌.படிச்சுட்டு சரி பண்ண‌ முடியுதான்னு பாத்துட்டு மறுபடியும் வர்றேங்க‌.மீண்டும் ரொம்ப‌ நன்றி இமா.

அன்புடன்,
கவிதாசிவக்குமார்.

anbe sivam

:-) இன்று என் மைக்ரோவேவ் அவனும் லாக் ஆகிவிட்டது. :-) ஸ்க்ரீன்ல ஒரு சாவி தெரிஞ்சுது. அப்போதான் உங்கள் கேள்வி நினைவுக்கு வந்தது. :-) ஸ்டார்ட் பட்டனை விட்டுவிட்டு மூன்று தடவை அழுத்த க்ளியராச்சு. ஸ்டார்ட் பட்டனை அதே போல விட்டுவிட்டு மூன்று தடவை அழுத்த மீண்டும் அந்த சாவி வந்தது. :-)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்