எலுமிட்சை ஊறுகாய்

நான் ஒரு எலுமிட்சை ஊறுகாய் பாட்டில் வாங்கினேன். அந்த ஊறுகாய் இனிப்பாக உள்ளது. அதனை எப்படி காரமான ஊறுகாயாக மாற்றுவது? அதை எப்படி செய்வது?

டியர் வினோதா,எலுமிச்சை ஊறுகாய் இனிப்பாக உள்ளதால் பழத்திலும் அதன் இனிப்பு சுவை நன்கு ஏறியிருக்கும்.ஆகவே அவற்றை மாற்ற முடியாது, இருந்தாலும் மிளகாய்த்தூளை அல்லது காய்ந்தமிளகாயை வறுகாமல் பொடித்து போட்டு நன்கு கலக்கி வைத்திருந்து உபயோகித்துப் பார்க்கவும். நான் இவ்வாறு மாற்றி செய்துப் பார்த்தது இல்லை வெறும் கணிப்பு தான்.நன்றி.

சகோதரி மனோஹரி சொன்னதுபோல் பழத்திலும் இனிப்பு ஏறியிருக்கும். இருந்தாலும் அதை புளிப்பாக மாற்ற எனக்கு தெரிந்த ஐடியாவை சொல்கிறேன். சில வினிகர் கூட இனிக்கிறது. (உதாரணமாக, ஆப்பிள் வினிகர்) அதனால் நல்ல புளிப்பான வினிகராக வாங்கி அந்த ஊறுகாயில் ஊற்றி நன்கு கலக்குங்கள். அத்துடன் காய்ந்த மிளகாயை லேசாக வறுத்து பொடித்து சேருங்கள். அதிலுள்ள இனிப்பு சுவை நல்ல ஒரு ஊறுகாயின் சுவையாக மாற வாய்ப்புள்ளது. Try பண்ணி பார்த்து சொல்லுங்கள்!

மேலும் சில பதிவுகள்