அன்பு தோழிகளே,
எனது குழந்தைக்கு தற்பொழுது 2 1/2 மாதங்கள்.
தாய்பால் தான் கொடுக்கின்றேன். நான் அடுத்த மாதம் வேலைக்கு செல்ல உள்ளேன்.
இப்பொழுது தாய்ப்பாலை ஃபீடிங் பாட்டிலில் கொடுத்தால் குடிப்பதில்லை. தயவு செய்து
எவ்வாறு பாட்டிலை பழக்கப்படுத்துவது என கூறுங்கள் தோழிகளே.
உதவுங்கள் தோழிகளே...
உதவுங்கள் தோழிகளே...
தயவு செய்து உதவுங்கள்
தயவு செய்து உதவுங்கள் தோழிகளே. பாப்பா மிகவும்அழுகிறாள் ஃபீடிங் பாட்டிலில் கொடுக்கும் பொழுது. உங்களது ஆலோசனைகளை எதிர்பார்க்கறேன்.
வேணி
நான் என் அனுபவத்தில் சொல்கிறென். முதலில் ஒரு நிப்பிலை வாங்கி அதை பாப்பா சப்ப பழக்குங்கள். அதை சப்பி பழகிட்டால் பிறகு பாட்டிலில் பால் ஊற்றி கொடுங்கள். இப்போதைக்கு ஸ்பூனில் கொடுங்கள். நான் என் குழந்தைக்கு 6 மாதம் ஆன பின் தான் வேலைக்கு சென்றேன். நீங்களும் பாப்பாவிற்க்கு 6 மாதம் ஆகும் வரை இருப்பது நல்லது என்ட்ரு தோன்றுகிரது
சங்கீதா
நன்றி சங்கீதா. நீங்கள் கூறியதை முயற்சிக்கிறேன். 6 மாத்த்திற்கு லீவ் கிடைப்பது கடினம்.
நீங்கள் பாப்பாவற்கு எத்தனை மாதத்திலிருந்து இவ்வாறு பழக்கப்படுத்தினீர்கள்?
வேணீ
4 மாதத்தில் இருந்து
சங்கீதா
நன்றி சங்கீதா.
Veni spoon bowl dhan best
Veni spoon bowl dhan best method nu en doctor sonnaru. Bottle palagitta tumbler la kudikka vaikka palakkaradhu kashtama irukum nu sonnaru pa..