சிங்கப்பூர் சிக்கன் வறுவல்

தேதி: January 29, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

கோழி - ஒன்று
உலர்ந்த மிளகாய் - 10
பச்சரிசி - 2 மேசைக்கரண்டி
தயிர் - அரை கப்
இஞ்சி - இரண்டு அங்குலத் துண்டு
பூண்டு - 8 பல்
கறிவேப்பிலை - 10 இலைகள்
கொத்தமல்லித் தழை - சிறிது
எண்ணெய் - அரை கப்
மைதா - கால் கப்
எலுமிச்சை சாறு - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

கோழிக் கறியினை நன்கு கழுவி சுத்தம் செய்து சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இரண்டு மேசைக்கரண்டி எலுமிச்சை சாறுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி, கோழித் துண்டுகள் மீது தடவி சிறிது நேரம் ஊற வைக்கவும்.
மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, அரிசி, உலர்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக போட்டு மீதமுள்ள எலுமிச்சை சாறு சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த மசாலாவினை தயிருடன் சேர்த்து மிருதுவான விழுதாக வரும் வரை நன்கு கலக்கிக் கொள்ளவும்.
கோழித்துண்டுகளின் மேல் கத்தியை வைத்து கீறி விடவும். பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவினை கோழித்துண்டுகள் மீது நன்கு தடவி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சுமார் 6 மணி நேரம் நன்கு ஊற விடவும்.
பிறகு ஊற வைத்த கோழியை எடுத்து மைதா மாவில் பிரட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மைதா மாவில் பிரட்டிய கோழித்துண்டுகளை எடுத்து, அதிகப்படியாக ஒட்டியிருக்கும் மைதாவினை உதரிவிட்டு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான சிங்கப்பூர் சிக்கன் தயார். கொத்தமல்லித் தழையினை பொடியாக நறுக்கி அதில் தூவிப் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சிங்கப்பூர் சிக்கன் வறுவல் செமயா இருக்கு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.