தேதி: January 29, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. காந்திசீதா அவர்களின் ஈஸி ஐஸ்கிரீம் குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய காந்திசீதா அவர்களுக்கு நன்றிகள்.
பால் - ஒரு லிட்டர்
சர்க்கரை - தேவைக்கேற்ப
கார்ன் மாவு - 2 தேக்கரண்டி
வெண்ணெய் - 4 தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - சிறிது
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி சுண்ட காய்ச்சவும். அடுப்பின் தணலை மிதமாக வைத்திருக்கவும். பால் சுண்டியதும் சர்க்கரை சேர்த்து மீண்டும் சிறிது நேரம் காய்ச்சவும்.

கார்ன் மாவை அரை கப் பாலில் கரைத்து அடுப்பில் இருக்கும் பாலுடன் சேர்க்கவும். அதனுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும்.

பிறகு வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு ஆற வைக்கவும். ஆறியதும் பீட்டரை (beater) வைத்து நன்கு கலக்கி ஃப்ரீசரில் வைக்கவும்.

ஒரு மணி நேரம் கழித்து வெளியில் எடுத்து பீட்டரால் மீண்டும் நன்கு கலக்கி ஃப்ரீசரில் (freezer) வைக்கவும்.

ஐஸ்க்ரீம் நன்கு செட் ஆனதும் பவுலில் வைத்து அலங்கரித்து பரிமாறவும். சுவையான வெனிலா ஐஸ்க்ரீம் ரெடி.

Comments
rev
ரேவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. வாழ்த்துக்கள் மேடம். ஏற்கனவே. குல்ஃபி செய்யனும்ன்னு இன்னும் செய்யாம இருக்கேன். அதுக்குள்ள இன்னொரு ஐஸ்கிரிம்மா. யம்மி .ப்
Be simple be sample
Revathy.p
ஐஸ்கிரீம் பார்க்கவே ரொம்ப நல்லாருக்கு, so yummy.
கிச்சன் குயின்க்கு வாழ்த்துக்கள்.
நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..
அன்புடன்
Sheela
ரேவ்..
வாழ்த்துக்கள் ஐஸ்கிரீம் பேபி. குறிப்பு கலர்புல்லா இருக்கு.கடைசி படம் அழகு.
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
ரேவ்
இதுவரை ஐஸ்கிரீம் செய்தது இல்லை. இது ரொம்ப ஈசியா இருக்கு. நிச்சயம் செய்து பார்த்துடறேன். வாழ்த்துக்கள் கிச்சன் குயின்.
அன்புடன்
பாரதி வெங்கட்
ஐஸ்க்ரீம்
ஆஹா இப்படி ஐஸ்க்ரீமா செய்து அசத்திட்டு இருக்கியேம்மா இப்ப செய்து சாப்பிட முடியாதே. சூப்பரூ
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
really its very easy method
really its very easy method pa. correct name . nice. congrates
do or die by gandhiji
revathy.P
வித விதமான குறிப்புகள் எல்லாமே சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்..