உதவுங்கள்

தோழிகளே
என் குழந்தைக்கு 1 வயது. பிறக்கும்பொது 3.25 கிலோ இருந்தான். இப்பொழுது 8 கிலோ. நான் வேலைக்கு செல்வதால் என் மாமனார் குழந்தயை பார்த்து கொள்கிறார். நான் காலை வரும்பொழுது சத்துமாவு கஞ்சி கொடுப்பேன். த்ற்பொழுது 1 மாதமாக‌ அவன் கஞ்சி குடிக்க அடம் பிடிகிரான். நானும் இடைவெளி விட்டு கொடுத்து பார்த்தேன் ஆனாலும் குடிப்பதில்லை. மாலையிலும் குடிப்பதில்லை. மிகவும் அழுகிறான். நான் என்ன‌ செய்வது? கொஞ்ச‌ நாட்களுக்கு கஞ்சியை நிறுத்தலாமா அதற்க்கு பதில் வேறு என்ன‌ கொடுப்பது? இரவில் சாதம் ஊட்டலாமா அல்லது வேறு என்ன‌ ஊட்டுவது

ஒரு வயது ஆயிடுச்சுன்னா கஞ்சி எல்லாம் கொடுக்கணும்னு கட்டாயம் இல்லைங்க. சாதாரணமா நாம சாப்பிடும் சாப்பாட்டையே காரம் குறைவா கொடுங்க. நெய் விட்டு பருப்பு சாதம், தயிர் சாதம் இப்படி அவங்களுக்குன்னு சாதம் குழைய வேக வெச்சு கலந்து ஊட்டுங்க. இட்லி, இடியாப்பம் இப்படி ஆவியில் வேக வெச்ச உணவுகளும் நல்லது. காரம் குறைவா சாம்பார் எல்லாம் கூட பழகலாம். இப்பவே பழகினா தான் உணவு சாப்பிட படுத்த மாட்டாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி சொன்ன பதிலைத்தான் நானும் தட்ட வந்தேன்.

விதவிதமா கொடுக்க ஆரம்பிச்சா அவங்களுக்கும் சுவைகளில் ஒரு ஈடுபாடு வரும். சாப்பிடுவாங்க. கஞ்சி போரடிச்சுப் போச்சு அவங்களுக்கு.

‍- இமா க்றிஸ்

en ponnuku 9 months start aagi iruku...3 dayssa. ethuvume sapta matra..3 days munnati fever and cold irunthuchu dr drops kututhangga.fever sari aagittu but cold innum sari aagala...cold iruntha sapta matanggala...morning idly milk vitu pichanchi kutupean...mathiyam paruppu satham mattum vachi kututha saptara...vera ethuvum sapta matra..avaluku karam avalava pidikka mattanggithu..idly ku sambar vachi kututhasapta matra...milk vachi kututha saptra..sambar romba karamum illa appatiyum sapta matra...enna pannalam friends..avaluku sweet taste thaan pitikuthu..karam sapta vaikka enna pannalam...vera enna food lam kutukalam..

எல்லாம் நன்மைக்கே

மேலும் சில பதிவுகள்