வெனெஷியன் ப்ளைண்டைச் சிறியதாக்குவது எப்படி? பாகம் - 1

தேதி: January 29, 2015

No votes yet

ரெடிமேட் ப்ளைண்டுகள் சாதாரணமாக குறிப்பிட்ட சில நீள அகலங்களில்தான் கிடைக்கும். ஜன்னல் அகலத்தை அளந்து கொண்டு அதற்கேற்ப ப்ளைண்டை வாங்கிக் கொண்டால் உயரத்தைச் சுலபமாக நீங்களே உங்கள் தேவைக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளலாம்.

 

கத்தரிக்கோல்
கூர் முனைக் குறடு (Nose pliers)
ஸ்க்ரூ ட்ரைவர்
லைட்டர்

 

மேற்கூறியுள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முதலில் பொருத்தமான அகலம் கொண்ட ப்ளைண்டை அதற்கு உரிய இடத்தில் பொருத்திக் கொள்ளவும்.
ப்ளைண்ட்டை கிடை நிலைக்குத் திருகி வைத்து, முடிந்த அளவு நீளமாக இறக்கிவிடவும். (இங்கு மேசை இருப்பதால் இவ்வளவுதான் இறக்க முடிந்தது).
ஸ்க்ரூ ட்ரைவர் கொண்டு, ப்ளைண்டின் அடியிலுள்ள மொத்தமான பலகையின் கீழ் இருக்கும் தக்கைகள் அனைத்தையும் கவனமாகப் பிரித்து எடுக்கவும்.
குறட்டின் உதவியால் அவற்றுள் இருந்து முடிச்சுகளை வெளியே இழுத்துப் பிடித்து, வெட்டி நீக்கிவிடவும்.
ஜன்னற்கட்டிலிருந்து மிக அருகே உள்ள பலகை எது என்பதைக் கவனித்து வைக்கவும்.
அதற்குக் கீழே உள்ள பலகையில், நடுவில் இருக்கும் துளை வழியாக நூலை மேலே எடுக்கவும்.
பலகைகளின் வெளி ஓரமாக இரண்டு நூல்கள், இடையில் மெல்லிய நூல்களோடு பார்க்க ஏணி போல் தெரியும்.
ஆறாவது நிலையில் (ஸ்டெப் 6) சொல்லியிருக்கும் பலகைக்குக் கீழே உள்ள பலகைக்கு மேலாக (கூடிய வரை குறுக்கு நூலுக்குச் சமீபமாக) இந்த நூல்கள் இரண்டையும் நறுக்கிவிடவும். இதே போல இருக்கும் மீதி இடங்களிலும் நூல்களை நறுக்கவும்.
இப்போது வெட்டிய இடத்திற்குக் கீழே உள்ள அத்தனை பலகைகளும் சேர்ந்தாற் போல ஒன்றாகக் கீழே விழும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்