பொட்டுக்கடலை கொதிக்க வைத்தது

தேதி: January 30, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. லாவண்யா அவர்கள் வழங்கியுள்ள பொட்டுக்கடலை கொதிக்க வைச்சது என்கின்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய லாவண்யா அவர்களுக்கு நன்றிகள்.

 

பொட்டுக்கடலை - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 5
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கடலைப் பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு


 

பொட்டுக்கடலை மற்றும் காய்ந்த மிளகாயை பொடியாக திரித்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து வதக்கவும்.
பருப்பு நன்கு சிவந்ததும் கரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
எண்ணெய் மேலே வந்ததும் இறக்கவும். இந்த சட்னி இட்லி தோசைக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும்.

இந்த வகை சட்னி காரமாக தான் இருக்க வேண்டும். வேண்டுமானால் உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாயை கூட்டி அல்லது குறைத்து கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்