பூண்டு குழம்பு

தேதி: January 30, 2007

பரிமாறும் அளவு: 5 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பூண்டு - 40 பல் (அல்லது) தலைக்கு 15
நல்லெண்ணெய் - 1 கப்
புளி - எழுமிச்சை பழ அளவு
சௌராஸ்டிரா குழம்பு பொடி - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுததம் பருப்பு - தாளிக்க


 

முதலில் பூண்டை தோலுரித்து கொள்ளவும், புளியை தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெயை ஊற்றி காய வைக்க வேண்டும், எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுததம் பருப்பு, பூண்டு போட்டு தாளிக்க வேண்டும்.
பூண்டு பொன்னிறமான பிறகு சௌரஸ்டிராக்குழம்பு பொடியை போட்டு கிளறி விடவும்.
பின்பு உப்பு மற்றும் புளி கரைசல், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். நல்லெண்ணெய் வெளியே வரும்வரை கொதிக்க விடவும்.
பூண்டு குழம்பு ரெடி.


சௌராஸ்டிரா குழம்பு பொடி ரெஸிப்பியை ஏற்கனவே கொடுத்துள்ளேன் குழம்பு பொடியை சிறிய அளவில் செய்து முயற்சித்துப்பாருங்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

hi ranjani madan ,

i tried ur pundu kulambu today , it was very delicious.
keep giving many more recipies.

hi

அனிதாசாந்திக்கு
எனது பதாற்த்தை செய்துபார்த்து பதில் அனுப்பியதற்கு மிக்க நன்றி

உப்பில்லா பண்டம் குப்பையிலே

ஹாய் ரஞ்சனி மேடம், சௌராஸ்டிரா குழம்பு பொடி என்றால் என்ன? எங்கு கிடைக்கும்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.