தேதி: January 31, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பான் செய்ய:
வெற்றிலை - 2
குல்கந்து - 2 மேசைக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
பால் - சில மேசைக்கரண்டி
ஏலக்காய்த் தூள் - கால் தேக்கரண்டி
ஐஸ்க்ரீம் செய்ய:
பால் - ஒரு கப் & கால் கப்
கார்ன் ஃப்ளார் - 4 தேக்கரண்டி
சர்க்கரை - அரை கப்
ஃப்ரெஷ் க்ரீம் - அரை கப்
கால் கப் குளிர்ச்சியான பாலில் கார்ன் ஃப்ளாரைக் கரைத்து வைக்கவும்.

மீதமுள்ள பாலை நன்றாகக் காய்ச்சி, அதில் சர்க்கரை சேர்த்து 5 நிமிடங்கள் சிறு தீயில் வைத்துக் கிளறவும்.

சர்க்கரை கரைந்ததும், கரைத்து வைத்த கார்ன் ஃப்ளாரை ஊற்றி கிளறி மேலும் 5 நிமிடங்கள் சிறு தீயில் வைத்துக் கிளறவும். ஸ்பூனின் பின் பக்கம் திக்காக ஒரு லேயர் போல ஒட்டும் பதம் வரும் போது எடுத்து ஆறவிடவும்.

பான் செய்வதற்காகக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் போட்டு, தேவைக்கேற்ப சிறிது சிறிதாக பால் சேர்த்து நைசாக அரைக்கவும்.

பால் நன்றாக ஆறியதும், அத்துடன் அரைத்து வைத்துள்ள பான் கலவை மற்றும் ஃப்ரெஷ் க்ரீமைச் சேர்க்கவும்.

இந்தக் கலவையை ஒன்று போல நன்றாகக் கலந்து ஃப்ரீசரில் வைக்கவும்.

ஒரு முறை செட்டானதும் எடுத்து நன்றாக க்ரீமாக கலந்து, நன்கு செட் ஆகும் வரை மீண்டும் ஃப்ரீசரில் வைத்துவிடவும்.

சாப்பாட்டுக்கு பிறகு பரிமாற சுவையான பான் ஐஸ்க்ரீம் ரெடி.

பான் செய்யும் போது சிட்டிகை அல்லது சில துளி பச்சை ஃபுட் கலர் சேர்க்கலாம். வெற்றிலை தரும் கலரே போதுமானது தான். விரும்பினால் எலுமிச்சை சேர்க்கலாம். நான் சேர்க்கவில்லை.
பால் முற்றிலும் ஆறும் முன் எதையும் கலந்துவிட வேண்டாம். பால் திரிந்து போக வாய்ப்பு உண்டு.
Comments
வனி
சூப்பரா இருக்கு வனி.. இதை சாப்பிட்டுதான் வெறும் பிளேட்டை போட்டு முகபுத்தகத்தில் எல்லோரையும் வெறுப்பேத்துனீங்களா.. வித்தியாசமான குறிப்பு.. டேஸ்ட் எப்படி இருந்தது வனி.. வெற்றிலை சேர்த்து செய்திருக்கீங்க.. நிச்சயம் இதை ட்ரை பண்ணணும்.. குல்கந்து எந்த கடைகளில் கிடைக்கும்.. (இமாஅம்மா செய்தாங்களே அதுவா??) தூள் வனி..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
ஐஸ்கீரீம்
அருமையான ஐஸ்கீரிம். இது தான் அந்த காலித் தட்டுல இருந்ததோ..;) வாழ்த்துக்கள் வனி.
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
வனிதா
இதுவா அது!! ரொம்ப யோசிக்க வெச்சீங்க..
பான் ஐஸ்க்ரீம் கலக்கல்.. படங்கள் அருமை...
"எல்லாம் நன்மைக்கே"
வனி
வெற்றிலையில் ஐஸ்கிரீம்!!! ஆச்சர்யமாக மட்டுமல்ல,அசந்தும் போயிட்டேன்!!
என்னென்னவோ விதம்விதமா செய்து கலக்கறீங்க!!! சூப்பர் ஐஸ்கிரீம்!!!
அறுசுவையில் வரும் நிறைய குறிப்புகளை டிரைசெய்யனும்னு ஆசையா இருந்தாலும் , செய்தால் நான்மட்டுமே சாப்பிடனும்னு நினைக்கிறப்போ, அப்படியே ஜகா வாங்க வேண்டியதாகிவிடுகிறது!!
vani
பாதி கரெக்டா சொன்னேன். எனக்கு பாதி பங்கு வந்துடனும். சூப்பரா இருக்கு
Be simple be sample
Vani Akka
பான் ஐஸ்க்ரீம் வித்தியாசமா இருக்கு. செய்து பார்க்கிறேன் ..
பான் ஐஸ்க்ரீம்
பான் ஐஸ்க்ரீம் அருமை.
வெற்றிலையில் ஐஸ்கிரீம்
என்னென்னவோ விதம்விதமா செய்து கலக்கறீங்க சூப்பர்
ஐஸ்கிரீம்
வித்யாசமான சூப்பர் குறிப்பு சிஸ் . சுலபமாதான் இருக்குது. ட்ரை பண்ணிப்பார்க்கிறேன். நன்றி.
வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!
குல்கந்து னா என்ன?
குல்கந்து னா என்ன?
குல்கந்து
ரோஜா பூ இதழ்களை பதப்படுத்தி தயாரிப்பது குல்கந்து. உடலுக்கு நல்லது.
http://www.arusuvai.com/tamil/node/30515
இந்த இழையில் செய்முறையும் அதை பற்றிய தகவலும் கிடைக்கும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா