குழந்தை வரத்துக்காக உதவுங்கள்.

அனைத்து தோழிகளுக்கும் வணக்கம்
உங்களின் சகோதரியாக நினைத்து ஆலோசனை வழங்குங்கள். எனக்கு திருமணம் ஆகி 8 மாதங்கள் ஆகின்றது. குழந்தைக்காக முயட்சி செய்கிறோம் . எனக்கு irregular பீரியட். ஆரம்பத்தில் இருந்து 50, 65,45,32 என வேறுபடும். எனது சந்தேகம் என்னவென்றால் உடனடியாக மருத்துவரிடம் போய் period regulate panna treatement எடுத்துவிட்து குழந்தைக்காக முயட்சிப்பதா இல்லை மேலும் சில மாதங்களின் பின் egg form panna treatment எடுப்பதா ? எது சிறந்தது. மிகவும் குழப்பத்தில் உள்ளேன். தயவு செய்து உங்கள் அனுபவங்கள் ஆலோசனைகள் வழங்குங்கள். யாருக்காவது irregular period என்னைப்போல் இருந்து குழந்தை வரம் பெற்று உள்ளெர்களா ?

hi keerthi.. first doctorta poi consult pannunga..fulla detaila sollunga..irregular period and egg formation ethu first nu avanga solvanga..so first neenga doctora poi pakrathu nallathu.. niraya per irregular period irunthu kuzhanthai petrirukirargal..neenga kavala padama irunga..8 month thana aguthu no problem..just oru time dr ta consult pannitu vanga..may be egg growth ku follicular study pannalum panvanga..poitu vanga all the best seekram nallathu nadakum...dont worry thozhi...

//குழந்தைக்காக முயட்சி செய்கிறோம்// அப்படி நினைக்காமல் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து பாருங்க. இந்த எண்ணம்.... எல்லாவற்றையும் மெக்கானிக்கல் ஆக்கி வைக்கும். 8 மாதம்தானே ஆகி இருக்கிறது?

//உடனடியாக மருத்துவரிடம் போய் period regulate panna treatement எடுத்துவிட்து// & //சில மாதங்களின் பின் egg form panna treatment எடுப்பதா ?// முதலில் உங்கள் மருத்துவரோடு கலந்தாலோசியுங்கள். ட்ரீட்மண்ட் எடுக்க வேண்டுமா இல்லையா, அவசியம் என்றால் எப்போது ஆரம்பிக்க வேண்டும் என்பது எல்லாம் அவர் சொல்லுவார். நீங்களாகவே எதையும் கற்பனை பண்ணிக் கொள்ள வேண்டாம். அதே சமயம் சிகிச்சைக்காக எதையும் போஸ்ட்போன் பண்ண வேண்டியது இல்லை. //குழந்தைக்காக முயட்சிப்பதா// இப்படி இன்னொரு தடவை நினைக்க வேண்டாம். ட்ரீட்மண்ட் அதன் பாட்டில் போகட்டும்; உங்கள் வாழ்க்கை இனிமையானதாக இருக்கட்டும். //மிகவும் குழப்பத்தில் உள்ளேன்.// முதல்ல 'ட்ரை பண்ற' விஷயத்தை விட்டுவிட்டு வாழ்க்கையை உணர்வுபூர்வமாக அனுபவித்து வாழ ஆரம்பியுங்கள். //irregular period என்னைப்போல் இருந்து குழந்தை வரம் பெற்று உள்ளெர்களா ?// நிச்சயம் இருப்பாங்க.

‍- இமா க்றிஸ்

ungal karuthukkal ellarkum aruthal tharuthu..enaku next month first wedding one year mudia poguthu..but innum baby illa..ippa abroad la iruken husband kuda vanthu 6 month aguthu..last two montha inga doctora consult pandrom..tablets follow pandren.3 month back romba feel pannen conceive agalaye innum nu.. but ippa konjam konjam athae yosikratha vitruken..irunthalum mudiala..en friends and neibours 3 perku last nov la marriage achu avangalam conceive agirukanga..ellarum enna call panni kekum bothu varuthama iruku..ithanalaye friends yarkume romba pesurathe illa..familyoda iruntha kuda romba itha pathie think pandra vaipu irukathu..inga thaniya irukrathala romba kashtamarku..konjam relaxa iruka vazhi sollunga...

உங்கள் பெயர் என்னவென்று தெரிந்துகொள்ள ஆவல்.

//enna call panni kekum bothu varuthama iruku.// இதுல இப்போதைக்கு வருத்தப்பட எதுவும் இல்ல. மத்தவங்களோட உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீங்க. அவங்க கலியாணம் ஆனதுல இருந்து கூட இருந்திருக்காங்க. நீங்க அப்பவே விட்டுட்டுப் போகப் போறாங்க என்கிற டென்ஷன்லதான் இருந்து இருப்பீங்க. இப்ப 6 மாசம்தானே ஆகுது அங்க போய்? காலம் இருக்கு.

//konjam relaxa iruka vazhi sollunga...// க்ராஃப்ட் பண்ணலாம். சூப்பர் ரிலாக்சேஷன் அது. பின்னல் ஏதாவது பண்ணுவீங்களா? தமிழ்ல டைப் பண்ணப் பழகுங்க. அறுசுவைக்கு குறிப்பு அனுப்பலாம். பிறகு கமண்டுக்குப் பதில் சொல்றதுல நேரம் போறதே தெரியாது.

உங்கள் மனதைப் பாதிக்கும் விடயங்களைப் படிப்பதை முடிந்த வரை தவிருங்கள்.

‍- இமா க்றிஸ்

நீங்கள் ஒவருவரின் மனநிலை பிரச்சனைக்கு ஏற்ப அறிவுரை சொல்லும் போது என்னக்கு வியப்பாக இருக்கிரது,,,

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..

நானும் உங்களை போல தான் mindai மாற்ற முயற்சித்து கொண்டு இருக்கிறேன், library இல் கதைப்புத்தகம் எடுத்து வாசிக்கிறேன், 1புத்தகம் வாசிக்க தொடங்கினால் அது முடியும் வரை மனதில் வேறு எண்ணம் தோன்றுவதில்லை,

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..

என் பெயர் சுகன்யா..
௨ங்கள் வார்த்தைகளுக்கு நன்றி.. எனக்கு அப்படி எதும் செய்ய தெரியாது..இனி கற்றுக்கொள்கிறேன்..எனக்கு இங்க தனியாக இருக்கிறது தான் அதே சிந்தனையாகவே இருக்கு..மாற்றி கொள்கிறேன்..கல்யாணத்துக்கு அப்பரம் 25 நாள் பீரியட் ஆகிட்டு இருந்துச்சு..இப்ப 2 மாசமா டாக்டர்ட போனேன்..போன மாதம் 30 வந்துச்சு.இப்ப இன்னைக்கு 30 வந்துடுச்சு..ஏன் இப்படி கஷ்டமாக உள்ளது..

மிக்க நன்றி தோழிகளே.நாளை டாக்டரை பார்க்க போகலாம் எண்டு இருக்கிறேன். எனக்கு ஏஜ் அட்டெண்ட் பண்ணினதில இருந்து period ஒழுங்கில . அதுதான் ரொம்ப பயமா இருக்கு. இதை தவிர கடவுள் எல்லாத்தையும் தந்துள்ளார். நானுன் ஒரு சாதாரண பெண்போல வாழ ஆசை படுகிறேன்

அன்புடன் கீர்த்திவாணி

பயப்படாதீர்கள்... உங்களுடைய அதே பிரச்சினை தான் எனக்கும் இருந்தது. இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது.தைராய்டும் இருந்தது. நானும் திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகியும் கரு தாிக்காததால் மருத்துவரிடம் சென்ற போது திருமணம் ஆகி 1 வருடம் ஆனால் மட்டுமே குழந்தைக்கான சிகிட்சையை மேற்கொள்ள பாிந்துரைத்தார். ஆனால் நான் நம்பிக்கையை மட்டும் கைவிடவில்லை. இறைவனில் நம்பிக்கை வைத்தோம். இப்போது 10 மாத பெண் குழந்தைக்கு நான் தாய். எனவே நம்பிக்கையோடிருங்கள். குழந்தை வரம் கிடைக்கும். (எதற்கும் தைராய்டு உங்களுக்கு சாியாக உள்ளதா என பாிசோதித்துக் கொள்ளுங்கள்)

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

நன்றி பூர்ணி
டாக்ட்ரிடம் போனேன் blood test scanning செய்யணும் எண்டு சொன்நாங்க

அன்புடன் கீர்த்திவாணி

மேலும் சில பதிவுகள்