இறால் தொக்கு

தேதி: February 2, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

0
No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சங்கீதா அவர்கள் வழங்கியுள்ள இறால் தொக்கு என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சங்கீதா அவர்களுக்கு நன்றிகள்.

 

இறால் - கால் கிலோ
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
சோம்புத் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
பூண்டு - 4 பற்கள்
சோம்பு - சிறிது
எண்ணெய் - 100 கிராம்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - சிறிதளவு


 

இறாலைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதில் சுத்தம் செய்த இறாலைப் போட்டு, சிறிது மஞ்சள் தூள், சிறிது மிளகாய்த் தூள், சிறிது சோம்புத் தூள் போட்டு நன்கு கிளறிவிட்டு 2 நிமிடங்கள் வேகவிடவும். வெந்ததும் இறக்கி தனியாக வைத்திருக்கவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, நசுக்கிய பூண்டு மற்றும் கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கியதும் மீதமுள்ள சோம்புத் தூள், மிளகாய்த் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும்,
அதனுடன் இறால் கலவையைச் சேர்த்து பிரட்டி சுமார் 10 நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும்.
சுவையான இறால் தொக்கு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இறால் தொக்கு அருமையா இருக்கு.. கடைசிப்படம் பார்க்கும் போது நாக்கு ஊறுது.. சூப்பர்ங்க.. வாழ்த்துகள்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

எனக்கும் பிடிச்சிருந்தது. ரொம்ப நன்றி..

இறால் என்னோட ஃபேவரிட்,
தொக்கு அருமையா இருக்கு.
தர்ஷாவின் படங்கள் அனைத்தும் பக்கா :)