ட்ரை (உலர்) நூடுல்ஸ்

தேதி: February 3, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. இந்திரா அவர்களின் டிரை (உலர்) நூடுல்ஸ் குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய இந்திரா அவர்களுக்கு நன்றிகள்.

 

நூடுல்ஸ் - ஒரு பாக்கெட்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
தக்காளி - ஒன்று
காரட் - பாதி
உருளைக்கிழங்கு - பாதி
பச்சைப் பட்டாணி - அரை கப் (வேக வைத்தது)
மஞ்சள் தூள் - சிறிது (சுவை மற்றும் நிறத்திற்கு)
தாளிக்க:
எண்ணெய், கடுகு, கடலைப்பருப்பு


 

தேவையான‌ பொருட்களைத் தயாராக‌ எடுத்து வைத்துக் கொள்ளவும்.
காரட், வெங்காயம், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் ஆகியவற்றை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். தக்காளியை சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து நூடுல்ஸை போட்டு மூடி வைக்கவும்.
ஐந்து நிமிடம் கழித்து நூடுல்ஸை எடுத்து தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு தாளித்து, நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதனுடன் வேக வைத்து எடுத்து வைத்துள்ள பச்சைப் பட்டாணியை சேர்க்கவும்.
இந்த காய் கலவையில் தண்ணீர் வடித்து எடுத்து வைத்திருக்கும் நூடுல்ஸை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
பிறகு கொத்தமல்லித் தழை தூவி அலங்கரித்து பரிமாறவும். சுவையான நூடுல்ஸ் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்