tension

Tholikalay namaku problem evvalavo chinna vayathil irunthu ovvoruvarum pala piratchanaikalai kadanthu vanthuruppom. But marriage ku pinnadi namaku yerpadra problem rompa diff.mamiyar, nathanar, kolunthan , husband nala problem . Nengal ovvoruvarum antha problem eppadi solve panranga athavathu tention overakum pothu unga mana nilai eppadi irukku some time sethuralam pola irukkum la. Appa nenga unga manasai eppadi aruthal paduthikuvenga pa. Antha time la namma minda eppadi handle pannanum nu pls solunga pa.

hi rubini relaxa irunga ...tension vara time ethume pesama silenta thania konja neram manasa orunilai paduthunga..apparam porumaiya yosinga ethuku enna pannalanu..kovathla vara varthaium mudivum sariyanatha irukathu..athanala innum problem varama pathukonga..enna keta silenta irunthutu apparam yosinga..songs kelunga..yarathu pakathu kutties iruntha avanga kuda time spend pannunga..be cool...

Oru pblm na ovvorutharum diff handle panuvanga ellarumay ithil thangal pathivukal thanthal enaku matum illai ellarukkumay ithu usefulla irukumnu ninaikuren. Pls reply. Imma amma nenga kandippa mana thairiathai ellarum eppadi valarthukaranum nu natchunu oru reply panunga. Unga pathil kaka I am waiting.

hi rubini how r u ... ninga enna ketkurainganu purithu ... tension with kovam with azhugai thondaiyila vanthu nirkura emotional pesa mudiyatha oru nilai... samalikka mudiyatha oru nilai ... enakum kalyana puthithil vanthathu .. kelvi kettuta pothum sattham pottu tension aaki azhugaiya vanthudum ... en husband ethuku ni aHuvura karanam illamalnu solluvar ... neraiya thread iruku arusuvaila thedi paarunka ... naan psychiatrist kitta varaikum poitana parthukonka .... apuram en husband enna problem varama kavanichikitaru avarey pesipaaru etha irunthalum ... ippo naan ok romba vivarama solla mudiyala inka ... irunthalum imma amma matrum matra thozhikal vazhi solluvanka ... ithaiyelam samalika therinthaal ok than ..

//Imma amma nenga kandippa mana thairiathai ellarum eppadi valarthukaranum nu natchunu oru reply panunga. Unga pathil kaka I am waiting.// ஆஹா! ;))) இமா தமிங்கிலம் படிக்கிறதே குறைவு. அதுவும் நட்ட நடுவுல என் பெயர் போட்டு கேள்வி வைச்சிருக்கீங்க. :-)

இழைத் தலைப்பு / கேள்வி என்னன்னு தெரியல. கொஞ்ச நேரம் கழிச்சு வந்து படிச்சு பதில் சொல்றேன்.

‍- இமா க்றிஸ்

//But marriage ku pinnadi namaku yerpadra problem rompa diff.// பிரச்சினை என்று வந்துவிட்டால் க.மு, க.பி எல்லாமே ஒன்றுதானே!

//mamiyar, nathanar, kolunthan, husband nala problem// இங்க எல்லாம் தலைகீழ். என்னாலதான் அவங்களுக்குப் பிரச்சினைகள் இருந்தன. //antha problem eppadi solve panranga// சிம்பிள். பாசம்... எனக்குப் பிரச்சினைகள் ஏற்பட்ட காலகட்டங்களிலெல்லாம் அவங்க எல்லோரும் கொடுத்த சப்போர்ட்... சொல்ல முடியாத அளவு பெருசு. நான் எப்பவும் நானாகத்தான் இருக்கிறேன். என் எண்ணங்கள் அவங்களோடதை விட வித்தியாசம்தான். ஆனால்... பிரச்சினை என்று ஆனது இல்லை. எப்படி இமா இமாவோ அதே போல அவங்கவங்க அவங்க தான். என்னை என் குறைகளோட அவங்க ஏத்துக்கற மாதிரி அவங்களையும் நான் ஏத்துக்கணும்ல!

நீங்க குறிப்பிட்ட ஆட்கள் மட்டும்தான்னு இல்ல. எனக்கு எப்ப யாரோட பிரச்சினை வந்தாலும் அதுல என் பங்கு பாதிக்கும் மேல இருந்திருக்கு. ஒரு கை தட்டி சத்தம் கேட்குமா என்ன!

//tention overakum pothu unga mana nilai eppadi irukku// 20ஷன், 30ஷன் என்று சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி இருக்கும். :-)

எப்பவும்... என் மேல தப்புன்னா தாமதமாகிப் போச்சு, வெட்கம், அவமானம் அது இதுன்னுல்லாம் பார்க்க மாட்டேன். யாரா இருந்தாலும்... ஸ்கூல் குட்டீஸானாலும் கூட மன்னிப்புக் கேட்டுப்பேன். என் மேல தப்பு இல்லாட்டா கூட மன்னிப்பு கேட்டிருக்கேன், அது மற்றவங்களை ஆறுதல் படுத்தும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. இதுல நஷ்டம் எதுவும் எனக்கு இருந்தது இல்லை. லாபம்தான். சம்பந்தப்பட்ட ஆட்களை என்னோட நெருக்கமாக்கிருக்கு. அதோட 10ஷன் 0ஷன் ஆகிரும்.

யாரா இருந்தாலும் மனசுல உள்ளதை உள்ளபடி கொட்டி முடிச்சுருவேன். யோசிச்சு பேசுறது கொஞ்சம் குறைவு. அதே போல சொன்னதை தொடர்ந்து மனசுல தூக்கிட்டுப் போறது கிடையாது. மீண்டும் அதே ஆட்கள் கூட பிரியமா இருக்க என்னால முடியும். உண்மைல யாரோட நேசம் அதிகமோ அவங்களோடதான் அதிகம் சண்டை வந்திருக்கு. :-) கருத்து வேற்றுமைகள் இல்லாவிட்டால் என்ன மனிதர்கள் நாம்! சண்டைகளால பாசம் குறைஞ்சு போகாது எப்பவும்.

//some time sethuralam pola irukkum la. // கிடையவே கிடையாது. எனக்கு எந்த அளவு சாவைப் பற்றிப் பயம் கிடையாதோ அதற்கு மேலே வாழ்வதில் ஆசையும் இருக்கிறது. செத்துரக் கூடாது என்றுதான் நினைச்சிருக்கேன். நிழலருமை வெய்யிலிலே என்பாங்க. ஒரு தடவை உயிரோட போராடிப் பார்த்தா புரியும் உயிரின் அருமை. சாக நினைக்கவே கூடாது. ஒவ்வொருவராலும் நிச்சயம் மற்றவர்களுக்கு ஏதாவது பயன் இருக்கும். முன்னால எல்லாம் நான் இங்க வந்து லூஸு போல எதையாச்சும் பேசிட்டு இருக்கிறேன் என்றுதான் நினைச்சுட்டு இருப்பேன். ஆனா அப்பப்ப யாராவது வந்து என் பதில் அவங்களுக்கு உதவியா இருந்திருக்கிறதா சொல்லும் போது தோணும்... இப்புடியே எப்பவும் அறுசுவைக்கு வரவங்களை கொடுமைப் படுத்திட்டே இருக்கணும் என்று. :-)

எனக்குத் தெரிந்த இருவர்... ஆளுக்கொரு பிரச்சினையில் மரணம்தான் தீர்வு என்று தாங்களே தேடிக் கொண்டார்கள். அவர்கள் போய்விட்டார்கள். அவர்கள் பிரிவால் பாதிக்கப்பட்ட மற்றவர்கள்! அவர்களுக்கு எது தீர்வு! தற்கொலையா! சங்கிலித் தற்கொலைகளா!! இருவருக்கும் ஆளுக்கிரண்டு குழந்தைகளிருந்தார்கள். அவர்கள் நால்வரும் இப்போது நன்றாகத்தான் இருக்கிறார்கள். இருந்தாலும்... தாய் அரவணைப்புக்கு ஈடாக வேறு எது வரும்!

//Appa nenga unga manasai eppadi aruthal paduthikuvenga pa.// ஆறுதல் படுத்துறது கிடையாது நான். எப்பவும் எதிராளியோடு சமாதானமாகிப் போய்ருவேன். அது கொடுக்கிற ஆறுதல்... அனுபவித்துப் பாருங்கள், சுகம் அது. மற்றவரிடமிருந்து எனக்கு மன்னிப்புக் கிட்டாவிட்டால் அமைதியாக விட்டுவிடுவேன்.

//Antha time la namma minda eppadi handle pannanum nu pls solunga pa.// ;)) யார் எத்தனை சொன்னாலும், அந்தந்த நேரம் மூளை தான் நினைக்கிறதைத்தான் பண்ணும். :-) அப்போ யார் சொன்னதும் நினைவுக்கு வராது. வரக் கூடிய ஒரே விஷயம் 10ஷன்தான். :-)

நான் எப்பவும் நம்புற ஒரு விஷயம் இருக்கு. அது என் ஸ்பெஷாலிட்டி என்று கூட சொல்லலாம். "என்னை எப்போதும் எல்லோரும் நேசிப்பார்கள், என்னைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்," என்று 100% நம்புகிறேன்.

‍- இமா க்றிஸ்

Amma nanum unga charecter mari thanga. En mela thappu irunthalum illainalum kalil kuda vilunthuruven. But enakkum en hus sila problem varum pothu eppaumay nan than vitu kuduka vendiathaka iruku ana 1 percent kuda en mela eppaumay thappu irukatha mari na pathupen ma. Irunthalum nan than avangala samathanam paduthavendi irukku ma. En kuda avar ethana nal venum nalum pesama irunthurraru. Ennala mudila avar ta pesama ennala 1 sec kuda irukka mudila avar mela thappu irunthalum. En marriage love marriage. Ana na think pani patha namakkunu oru charecter iruku la athu padi yen nammala irukka vita matranga. Nu thunuthu ma. Nam yenna avvalavu mattamava poitom yethu keduthalum nammalay manippu ketkanu thonuthu ma some time la.

Sara I am fine pa. Eppadi pa ippadilam na ninaikuratha natchunu sollitanga. Nan solla vanthathu ithan pa super.

இமாமா இது போன்ற அறிவுரை எல்லாருக்கும் கிடைக்குமானு தெரில. சந்தர்ப்ப வசத்தால அறுசுவைல அனைவருக்கும் கிடைக்குது.
நிச்சயம் இப்பதில் படிக்கும் ஒவ்வொருவரையும் ஒரு நிமிடமேனும் சிந்திக்க வைக்கும். தெளிவான சிந்தனைகள். நானும் நினைப்பதுண்டு, மன்னிப்பு கேட்கிறமே, அதுனால நம்ம மன்னிப்போட மவுசு குறைஞ்சு போய்டுமோனு. சிலதை மன்னிப்பு கேட்காததினால இழந்திருக்கேன். என்னவோ நிறைய எழுதணும்னு தோணுச்சு.
ஆனா அதெல்லாம் இப்ப மறந்து போச்சு.

ரூபி உங்களை இப்படி அழைக்கலாமா? இந்த சாவை பத்தி மட்டும் நினைக்காதீங்க. அது எப்படியும் வரத்தான் போகுது. அதையேன் நாம இப்பவே போய் அழைக்கணும். எனக்லாம் சாவுனா ரொம்ப பயம். ஒருவேளை செத்த பிறகு இதை விட ஒரு கொடுமையான உலகம் நமக்காக காத்திருந்தா என்ன செய்ய?

நத்தைமொழி :
வம்பு சண்டைக்கும் போகாதே!!
வந்த சண்டைக்கும் போகாதே!!

Tharalamaga rubi nu kupidalam. Enaku death patry kavalai um illa atha nanagavey thedikavum maten pa. Unga name rompa diff iruku .ithu than unga name a.

hi rubini .,,, naan consultany work pannen appo enka manager avaru asst lady ya pathi enkitta thittuvaaru romba seriousa pesuvaaru ...naan kettutu thalaiya mattum aatitu vanthuduven appuram avanka vanthathum solli,naan feel pannuven ..namma kooda illatha pothu ippadithaney nammala pesuvaaru nu but antha madam "avaru kedakuraru vittu thallu " sollittu eppo polum work pannuvanka some times avankala naan nenaichipen ... appadi nenaikum pothu some times situation samalichiruken ... so ithu mathiri manthiram manathukulley sollikulam kooda oralavuku use rubini ...

மேலும் சில பதிவுகள்