தேதி: February 5, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சாதிகா அவர்களின் ஹாட் & சோர் தால் என்ற குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சாதிகா அவர்களுக்கு நன்றிகள்.
கடலைப்பருப்பு - ஒரு கப்
பூண்டு - 6 அல்லது 8 பற்கள்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பச்சை மிளகாய் - ஒன்று
மிளகாய்த் தூள் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
மல்லித் தழை - சிறிது
கடுகு - கால் தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
எலுமிச்சம் பழம் - ஒன்று
உப்பு - சுவைக்கு
வெங்காயம் மற்றும் தக்காளியை மெல்லியதாக நீளவாட்டில் நறுக்கிக் கொள்ளவும். பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும். கடலைப்பருப்பை ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரும் வரை வதக்கவும்.

பூண்டு வதங்கியதும் நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் பொழுது மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி ஊறிய கடலைப்பருப்பையும் சேர்க்கவும்.

எல்லாவற்றையும் சேர்த்ததும் நன்கு கிளறி குக்கரை மூடி விடவும்.

கலவை வெந்து 2 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். எலுமிச்சம் பழச்சாறு மற்றும் நறுக்கிய மல்லித்தழை தூவி பரிமாறவும். மழை காலத்துக்கேற்ற காரசாரமான சைட் டிஷ் இது.

சப்பாத்தி, இடியாப்பம், இட்லி, சாதம் எல்லாவற்றுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

Comments
மீனாள்
நல்லா இருக்கு. சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ் இது. வாழ்த்துக்கள் கிட்சன் குயின்
எல்லாம் சில காலம்.....
நன்றி
என்னுடைய குறிப்பை மற்றும் படங்களை மிக அழகாக தொகுத்து வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவை குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
Expectation lead to Disappointment
பாலா
உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி தோழி. சப்பாத்திக்கு மிக பொருத்தமாக இருக்கும்.
Expectation lead to Disappointment