குடைமிளகாய் சாம்பார்

தேதி: February 5, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மஹாலெஷ்மி பிரகதீஸ்வரன் அவர்களின் குடைமிளகாய் சாம்பார் குறிப்பு இங்கே விளக்கப்படங்களுடன் செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மஹாலெஷ்மி அவர்களுக்கு நன்றிகள்

 

சாம்பார் பருப்பு - ஒரு கப்
பச்சை குடைமிளகாய் - ஒன்று (பெரியது அல்லது 2 சிறியது)
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
சாம்பார் பொடி - ஒரு மேசைக்கரண்டி
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - கால் தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க :
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகு - 5
பூண்டு - ஒரு பல் (நசுக்கி வைக்கவும்)
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

குக்கரில் சாம்பார் பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். குடைமிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம், மிளகு, கறிவேப்பிலை, போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதனுடன் குடைமிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றுடன் சாம்பார் பொடி, மிளகுத் தூள் சேர்த்து பிரட்டி விட்டு வேக வைத்தப் பருப்பை சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க வைக்கவும்.
குடைமிளகாய் வெந்து கொதித்து குழம்பு சற்று கெட்டியானதும் பெருங்காயப்பொடி மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும். நல்ல மணமும் சுவையும் நிறைந்த குடைமிளகாய் சாம்பார் தயார்.

புளி சேர்க்க விரும்பினால் தக்காளியின் அளவை குறைத்துக் கொள்ளவும். குடைமிளகாய் மஞ்சள், சிவப்பு, பச்சை கலந்தும் செய்யலாம், பார்க்க அழகாகவும் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எல்லாமே அருமையா செய்து இருக்கீங்க‌. வாழ்த்துக்கள் கிட்சன் குயின்.

எல்லாம் சில‌ காலம்.....

என்னுடைய‌ குறிப்பை மற்றும் படங்களை மிக‌ அழகாக்கி , என்னையும் கிச்சன் குயினாக‌ தேர்வு செய்ததற்கு அட்மின் மற்றும் டீமிற்கு மிக்க‌ நன்றி.

Expectation lead to Disappointment

உங்களது வருக்கைக்கும் வாழ்த்திற்கும் மிக்க‌ நன்றி.

Expectation lead to Disappointment