க்ரீன் பீஸ் மசாலா

தேதி: February 5, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சீதாலெட்சுமி அவர்கள் வழங்கியுள்ள க்ரீன் பீஸ் மசாலா குறிப்பு, சில மாற்றங்கள் செய்யப்பட்டு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சீதாலெட்சுமி அவர்களுக்கு நன்றிகள்.

 

பச்சைப்பட்டாணி - 250 கிராம் (அல்லது) காய்ந்த பட்டாணி - 150 கிராம்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2 அல்லது 3
உருளைக்கிழங்கு - 2
சீரகம் - அரை தேக்கரண்டி
ஏலக்காய் - ஒன்று
கிராம்பு - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
சிவப்பு மிளகாய்த் தூள் - ஒன்று அல்லது ஒன்றரை தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
ரீஃபைண்ட் ஆயில் - ஒரு மேசைக்கரண்டி
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி (விரும்பினால்)
பச்சை கொத்தமல்லித் தழை - 2 மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப


 

வெங்காயம் மற்றும் தக்காளியை சிறுத் துண்டுகளாக நறுக்கவும். உருளைக்கிழங்கை சிறு சதுரத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, ஏலக்காய், கிராம்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ப்ரஷர் பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து வெடித்ததும் அரைத்து வைத்துள்ள விழுதினை ஊற்றி கிளறி விடவும்.
அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறி விட்டு கொதிக்க விடவும்.
கலவை சிறிது நேரம் கொதித்ததும் பட்டாணி, நறுக்கிய உருளைக்கிழங்கு, சிவப்பு மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் மற்றும் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி பேனை மூடி வைத்து வேக விடவும்.
கிழங்கு வெந்து கலவை கெட்டியானதும் இறக்கி பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி மேலே வெண்ணெய் சேர்க்கவும்.

காய்ந்த பட்டாணியை உபயோகிப்பதாக இருந்தால் 8 மணி நேரம் நீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பச்சைப்பட்டாணியாக இருந்தால் ஊற வைக்கத் தேவையில்லை.

ஹோட்டலில் பட்டர் நாண் மற்றும் சப்பாத்திக்கு சைட் டிஷ் ஆகப் பரிமாறப்படும் க்ரீன் பீஸ் மசாலாவை வீட்டிலேயே குறைந்த செலவில் அதே சுவையுடன் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்க்கவே நாக்குல‌ எச்சில் ஊறுது. வாழ்த்துக்கள் கிட்சன் குயின். அருமையா இருக்கு.

எல்லாம் சில‌ காலம்.....

வாழ்த்துக்கள் மீனாள். எல்லா ரெசிபியும் சூப்பரா இருக்கு. இதுவும் சூப்பர்.

Be simple be sample

வாழ்த்துக்கள் கிச்சன் குயின். நீங்க‌ முதல் முறையா இப்பதான் பிரசன்ட் பண்றீங்களா? படங்களை பார்த்தால் முதல்முறை என்றே தோன்றவில்லை. அனைத்தும் அழகு. சும்மா நச்சுனு இருக்குது.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

அறுசுவை அட்மின் மற்றும் டீமிற்கு மிக்க‌ நன்றி.

Expectation lead to Disappointment

ஒவ்வொரு குறிப்புக்கும் சிரமம் பார்க்காமல் பதிவு போட்டு வாழ்த்து தெரிவித்த‌ உங்களுக்கு மிக்க‌ நன்றி தோழி.

Expectation lead to Disappointment

உங்களுடைய‌ வருக்கைக்கும் , வாழ்த்திற்கும் மிக்க‌ நன்றி ரேவதி.

Expectation lead to Disappointment

உங்கள் வாழ்த்திற்கு மிக்க‌ நன்றி. கிச்சன் குயினுக்கு நான் இது தான் முதல் முறை. இதற்கு முன்பு சில‌ விளக்கப்பட‌ குறிப்புகளை தந்துள்ளேன். இம்முறை எனது படங்கள் ரொம்ப‌ சுமார் மெர்சி.அதை அழகாக‌ கொண்டு வந்துள்ள‌ பெருமை அனைத்தும் அறுசுவை குழுவினரை சாரும் தோழி.

Expectation lead to Disappointment

பாக்கவே ரொம்ப நல்லாருக்கு அவசியம் செஞ்சு பாக்கனும். கிச்சன் குயின்க்கு எனது பாராட்டுக்கள்.

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela

கிச்சன் குயின்க்கு வாழ்த்துக்கள். எல்லா டிஷ்ம் சூப்பரா செய்து காட்டியிருக்கீங்க.
நான் சப்பாத்திக்கு வித விதமா சைட் டிஷ் தேடிக் கொண்டிருப்பேன், அவசியம் இந்த ரெசிப்பி எனக்கு கை கொடுக்கும் :)
நன்றி

செய்து பார்த்திட்டு சொல்லுங்க‌.உங்கள் பாராட்டிற்கு மிக்க‌ நன்றி ஷீலா.

Expectation lead to Disappointment

உங்கள் பாராட்டிற்கு மிக்க‌ நன்றி. நான் உங்க‌ சமையல் குறிப்புகளுக்கும், படங்களுக்கும் அதை செய்து காட்டும் விதத்திற்கு ரசிகை.தினமும் அறுசுவை திறந்து பார்க்கும் போது உங்களுடையது மற்றும் வனி யோட‌ குறிப்பு இருக்கா என்று தேடுவேன்.நீங்கள் இரண்டு பேரும் வித்தியாசமாக‌ எளிமையாக‌ செய்து காண்பிப்பீர்கள். குழந்தைகள் நலமா? என்ன‌ வயதாகிறது?

Expectation lead to Disappointment

கிரீன் பீஸ் மசாலா செய்தேன். சூப்பரா இருந்தது. ஹோட்டல் மசாலா மாதிரிதான் இருந்தது. நன்றி மீனாள் சிஸ், சீதாம்மா.

கலர் உங்க‌ அளவுக்கு வரல‌. உருளைகிழங்கு, பட்டாணியை வேகவைத்து சேர்க்கணுமா. பிகாஷ் கிழங்கு வேக‌ கொஞ்சம் டைம் எடுத்துச்சு. அதான் கேட்டேன்.

நன்றி!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!