மகனை ப் பற்றி...pls help

எனக்கு ஐந்து வயதில் மகன் இருக்கான் அவன் மிகவும் குறும்பா இருக்கான் விட்டுல இருக்கரவங்கள அடிக்கரது உதகைக்கரது இருக்கான் Studies la concentration illa,avan attitude how to change it... Pls help..

5 வயது பையன் குறும்பா இருக்கிறது வழக்கம்தானே! //விட்டுல இருக்கரவங்கள அடிக்கரது உதகைக்கரது // இது குறும்பு இல்லை. ஏதாவது காரணம் இருக்கும். என்னன்னு கவனிச்சு சரியாக்கப் பாருங்க. உங்க கவனத்தைத் தன் பக்கம் இழுக்கிறதுக்காகச் செய்றாரா? இல்ல... உங்க மேல சின்னதா ஏதாச்சும் கோவம் இருக்கா? அவர் நினைச்சது கிடைக்காம இருக்கிற ஆதங்கமா இருக்கலாம். கவனிச்சு திருத்தணும்.... பையனை அல்ல பிரச்சினையை, சில சமயம் பெரியவங்களேதான் பிரச்சினைக்குக் காரணமா இருக்கிறோம்.

//Studies la concentration illa,// ம்.. //avan attitude how to change it.// கர்ர்ர்ர்.... ஆட்டிட்யூட் மாற வேண்டியது முதல்ல உங்களுக்குத்தான். என்னங்க இது! ஐஞ்சு வயசுப் பையனுக்கு படிப்புல எங்கருந்து கான்சன்ட்ரேஷன் வரும்! ஏன் வரணும்? அதனால என்ன லாபம்? இந்த வயசுக் குட்டிக்கு படிப்பின் முக்கியத்துவம் தெரியுமா? நீங்க உங்க பையன் கெட்டிக்காரன்னு மத்தவங்க கிட்ட ஷோபீஸாக்கிக் காட்டி பெருமைப்பட்டுக்கறதுக்காக குழந்தையைப் படிக்க வைக்க வேணாம். குழந்தைங்க அது. ரசிக்கிற மாதிரி, பிடிக்கிற மாதிரி சொல்லிக் கொடுக்கணும்.

ஐஞ்சு வயசுல படிச்சா... எந்த வயசுல விளையாடுறது! + 2 அப்பவா? நிறையப் பெற்றோர் பண்ற தப்பு இதுதான்.

படிக்கச் சொல்லிப் படுத்துறதாலயும் ஆட்களை அடிச்சு உதைக்கிற ஆட்டிட்யூட் வரலாம். பிறகு அடியோட படிப்பு பிடிக்காம போய்ரும். உங்களுக்குத் தேவையா இருந்தா விளையாட்டு விளையாட்டா கத்துக் கொடுக்கலாமே தவிர பையன் படிக்கணும்னு எதிர்பார்க்க வேணாம். நல்ல அம்மாவா, குழந்தையைப் புரிஞ்சுக்கற அம்மாவா இருங்க. குட்டியர் சரியான சமயத்துல நீங்கள் எதிர்பார்க்கிற ரிசல்ட் கொடுப்பார்.

‍- இமா க்றிஸ்

:-) இதுவே மொத்தம் 5 த்ரெட் பப்ளிஷ் ஆகிருக்கு.

‍- இமா க்றிஸ்

இமா அம்மா,நிங்க சொல்லுவது நூத்துக்கு நூறு உண்மை...குழந்தைக்கு படிப்பின் முக்கியம் இப்போது தெரியாது...நிங்க உங்க பையனை அடித்து படிக்க வைக்கிரிங்கனு நினைக்கறேன்...அதனால தான் அவன் உங்க மேல இருக்க கோவத்தை அடுத்தவரிடம் காட்டுகிறான்...உங்களிடம் அந்த கோவத்தை காட்டினால் நிங்க மிரட்டுவிங்க அல்லது அடிப்பிங்க...அவனுக்கு விளையாட கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க...அவனுக்கு என்ன தேவைனு நிங்க தெரிஞ்சுக்குங்க...

En anna payanuku ipa 1 yr aguthu,bt thampi suthama entha activities ilama irukan,kaluthu nikuthu,bt kaluthu thukki paka matran,adikadi kai kaal rompa nadunkura mari udharuran,ethume sapdaruthu ila,pakurathu ila,innum mokatha pathu sirika kuda ila,thampi pornthu 2 hrsku mela alugave ila,so dr brainku oxigen pogathathala brain damage airuku,bt knja nala sari panalamnu songaa,bt innum oru improvement ila,yarathu ithu mari irunthu cure airuntha sollunga

Thampi rompa kai kaal udharathu fix varathu nu solranga athu varama iruka tab kuduthanga bt ipa oru asaivum ila,pomma mari irukan,fat knjam sapduvan,ipa sutham ethume sapdaruthu ila,pakave kastma iruku,pommaiku uyir ila,thampiku iruku avlo than ,nenajale rompa kastama iruku,yarathu ipadi irunthu cure airukangala,pls solunga,ipa thampiku fulla physiotheraphy than panrom

Bangaloretrichy,madurai ella idathulaum kattitim,neuro kuda thaniya kattitim,bt ethum crcta sola matranga,cure aguma agtahanu kida sola matranga,tab kudunga apadinu than solranga,ithanala anni inga tamilnadula irukanga,anna qatar la irukanga,innoru babyku kuda venamnu solranga kastama iruku

//ipa thampiku fulla physiotheraphy than panrom// அதைக் கட்டாயம் தொடரணும்.
//ethum crcta sola matranga,// அவங்களால சொல்ல முடியாதுதான். ஃபிசியோவைத் தொடரணும். அது கட்டாயம் பண்ண வேண்டிய விஷயம். அதற்கு குழந்தையின் உடல் எப்படி ரியாக்ட் பண்ணுது என்பதைப் பொறுத்துதான் சுகமாகும் விரைவு இருக்கும். //tab kudunga apadinu than solranga// அதைத்தான் நானும் சொல்றேன். இரண்டையும் நிறுத்திராதீங்க.

//anni inga tamilnadula irukanga,anna qatar la irukanga,innoru babyku kuda venamnu solranga kastama iruku// அவங்க பிரச்சினை எனக்குப் புரியுது. இப்ப இன்னொரு குழந்தை கிடைச்சா மூத்தவர் மேல் முழுசா கவனம் செலுத்துவது கஷ்டமா இருக்கும்னு நினைக்கிறாங்க. கர்ப்ப காலமும் சிரமமா இருக்கும். இவர் கொஞ்சம் வளர்ந்ததும் அவங்க நிச்சயம் இன்னொரு குழந்தையைப் பற்றி யோசிப்பாங்க.

இப்போதைக்கு... பிஸியோ தெரபியையும் டாப்லட்டையும் நேரம் தவறாம செய்யச் சொல்லுங்க. நம்பிக்கைதான் வாழ்க்கை. பாப்பா சுகமாகுவாங்க என்கிற நம்பிக்கையோட இருக்கச் சொல்லுங்க. நான் ப்ரே பண்ணுவேன்.

‍- இமா க்றிஸ்

தேவி நோய்க்கு என்ன காரணம் என்று தெரியாமலே வைத்தியம் பார்த்து கொண்டே இருப்பது மன சங்கடம் தான்.. எனக்கு தெரிந்த மருத்துவர் chennai govt hospital அவரிடம்
உங்களுக்கு தேரிந்த உறவினர் ,சென்னையில் இருந்தா நான் சொல்லும் மருத்துவரிடம் பொய் முதலில் பேசி பாருங்கள் என்ன காரணம் எதனால் இது மரபணு கொளர என்று முதலில் இதற்கான காரணம் கண்டு புடியுங்கள். அவர் அரசு மருத்துவமனை மருத்துவர் அதுமில்லாமல் ஏழைகளுக்கு பணமில்லைஎனில் அதற்க்கு ஏற்றார் போல் உதவுபர் நல்ல மருத்துவர். அவரு உங்களுக்கு எந்த மருத்துவரை பார்ப்பது என்ன செய்ய வேண்டும் என்று கூறுவார் இல்லையெனில் அவருடைய மருத்துவமனை multispeciality hospital தான்.. இப்போதே நேரம் கடத்தாமல் பாருங்கள். தேவி முதலில் நிங்கள் தைரியாமாக இருக்க வேண்டும். சோர்ந்து போக கூடாது.. வருத்த படாதீர்கள்.. சரி செய்து விடலாம். நான் இனிமே என்ன செய்யலாம்னு ஒரு சிறிய வழி சொல்லிருக்கிறேன் முயன்று பாருங்கள். இதற்காக நிங்கள் சென்னை வரவேண்டாம். ஒரு consultation தான் இது...

Sara sure mdm thampi porakurathuku munadi kudutha dt thali 15 days kaluchu than peranthan,anni mamiyar(anna means en hus oda anna mdm) en mamiyar suga prasavam than aga venumhu wait pana soli aparam athum agama 15 days kaluchu tab kuduthu pain varavachu delivery panaga,sila per athanala 15 days athikamanathala thampiku oxigen kedaikala so athana thanu solranga,aparam poranthathu alugave ila 3 hrs oru reactionum ila,athukaparam than aluthan,alugayum kanner varala verum sound matum than,ithu than fst symptoms

Thampiku physiotherapy pana rompa udampa verapavachukuran,avanuku kal rendum knjam valancha mari iruku,rompa sound keta than react panran,pakurathum ila,physiotherapy than daily 2 times panranga,bt innum apadiye than irukan,fst avanga trichyla scan panum pothu(ecg) normal irukunu sonaga,bt inga bangalorela nimhans la panaavanga abnormala irukunu solranga,onnume puriala,valara valara brain damage aguthunu solranga,ithu mari yarukathum irunthurka,cure airukangala ,pls tell someone

மேலும் சில பதிவுகள்