conceive aga

Hi friends. Enaku marriage agee 7month aguthu. But innum conceive agala. Intha month 4 days thalli pochchu but period vandhuduche. Nan lecturer ah work pandren. Up and Down 100 kms travelling irukku. So adhu ethum problem aguma. Please yaravathu sollunga pa please. Enna sapidalam eppady irukanumnu sollunga please.

dear

Im arusuvai member ma. travelingnala yedhum problem illa dr. unaku conceive aahuradhu samandhama enna doubtlnalum enaku therija oru lady doctor irukuranga avanga kita ne concel panalam dr. dnt wry ma. ne en mail idku un mail panu nan doctor number anupuran ma. suganyasugan83@gamil.com

Hi ma. Nan antha number ku call pannunen . But switch off ma. Ennanu check pannunanga. Please Vera Ethavathu help pannunga please.

விஜிசத்யா... இது எனக்குச் சம்பந்தமில்லாத விடயம்தான். ஆனாலும் தோணிச்சு, சொல்லிட்டுப் போறேன். ஃபோன்ல யார் பேசுறாங்கன்னு தெரியப் போறது இல்லை; அவங்க டாக்டரா இல்லையான்னும் தெரியப் போறது இல்லை. அப்படிக் கிடைக்கப் போற பதிலைவிட உங்களை நேர்ல ஒரு டாக்டர் பார்த்து பரிசோதித்து சொல்றது நம்பிக்கையாக இருக்கும் இல்லையா?

//Ennanu check pannunanga.// ஃபோன்ல யாரும் செக் பண்ண மாட்டாங்க. உங்க வீட்டாரோட பேசுங்க. அவங்க சொல்ற ஒரு டாக்டரிடம் அம்மா அல்லது அத்தை அல்லது இரண்டு பேரோடயும் நேர்ல போய்ப் பேசுங்க.

இவங்க முடிஞ்சா அந்த டாக்டர் பெயரையும் ஃபோன் நம்பரையும் இங்க கொடுக்கட்டும். நிறைய த்ரெட்ல சொல்றாங்க. சொல்லிட்டு தன்னோட ஈமெய்ல்தான் கொடுக்கறாங்க.

குழந்தை இல்லாத கவலைல இருக்கிறப்ப எதை வேணும்னாலும் செய்யலாம்னுதான் தோணும். யோசிச்சு நடங்க.

‍- இமா க்றிஸ்

எனக்கும் இப்பிடி 1சந்தேகம் வந்தது நான் மட்டும் தான் சந்தேகபடுறேன் என நினய்த்தேன்.mail id எடுப்பதற்கு இப்பிடி சொல்றாங்களோ என ஜோசித்தேன்,, உண்மையில் உதவனும் என நினய்த்தால் பொதுவன பகுதியிலே தொலைபேசி இலக்கத்தை போடலமே,,அத்துடன் நம் வைத்தியர்களுக்கு நாம் காசு குடுத்து நேரை போனலே நேரம் இல்லை அதில இப்போ இப்பிடி சும்மா போனில் கதைப்பாங்களா??

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..

K ma. Nan doctor check panniten ma. Thyroid lite ah irukku tablet koduthurukanga. Tablet poduren. 3 month ku. But intha month 4 days thalli pochchu but period vandhuduche. So adhanala keten.
Doctor parkkurathukku munnadi Ippady number tharenu sonnanga. Nan call panninen. Switch off Adhan keten mam.

Doctor la enanga therinja doctor theriadha doctor nalla doctor ah pakanum avalodhan

sry viji unaku help pana nan nanacha yelarum enaya thapa pesranga sry ne doctor kitayei check panikod dr.

keya podhuvana pahuthila pota gens kuda pathutu adha mis use panvanga understand this ma

//yelarum// இல்ல. ஜஸ்ட் இமா மட்டும்தான். ஒரு ஆள் 'எல்லாரும்' ஆக முடியாது. அதுவும் தப்பா எதுவும் சொல்லலயே! முடிஞ்சா இங்க அந்த டாக்டர் பேரையும் ஃபோன் நம்பரையும் என்ன க்வாலிஃபிகேஷன், எந்த ஊர்ங்கறதையும் கொடுங்கன்னுதான் சொல்றேன். மற்றவங்களுக்கும் உதவும்ல!! நீங்க அப்படிக் கொடுத்தா... நம்பிக்கை வந்தா... நானே ரெகமண்ட் பண்ணக் கூடும்.. அவங்க கூட பேசச் சொல்லி. :-)

கிட்ட ஊர்ல இருக்கிறவங்கன்னா... ஃபோன்ல பேசினப்புறம் போயும் சந்திக்கலாம். தூர இருக்கிறவங்களுக்கு ஃபோன்ல என்ன ஹெல்ப் கிடைக்கும்? இங்க நாங்க சொல்ற மாதிரி மேலோட்டமான பதில்தானே கிடைக்கும். அவங்களும் நான் & நீங்க சொன்னதைப் போல, பயணம் பண்றதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லைன்னு சொல்லுவாங்க. அதுக்கு மேல... இன்னொரு வைத்தியரைத்தானே பார்க்கணும்.

//podhuvana pahuthila pota gens kuda pathutu adha mis use panvanga understand this ma// :-) அது எல்லோருக்கும் தெரியுங்க. அந்த அளவு ரிஸ்க் எடுத்து போட்டிருக்கீங்கன்னா நிச்சயம் உதவ நினைக்கிறீங்க. புரியுது. ஆனா, நீங்க பொண்ணுதான்ங்கறதுக்கு என்ன ஆதாரம்? படிக்கிறவங்களுக்கு எப்பிடித் தெரியும்? ஒவ்வொரு த்ரெட்லயும் ஆரம்ப வரி... 'நான் அறுசுவை மெம்பர்மா." அது நீங்க சொல்லாமலே எல்லோருக்கும் தெரியும் சுகன்யா. இங்க கமண்ட் போட மெம்பர்ஸால மட்டும்தான் முடியும். இதை மட்டும் வைச்சு எதையும் நம்ப முடியாது இல்லையா?

திரும்பவும் சொல்றேன்... நான் உங்களைத் தப்பா சொல்லல. சொல்றதா இருந்தா ஒரு வாரம் முன்னாலயே சொல்லி இருப்பேன். இங்க யார் என்ன சொன்னாலும் ஒருத்தர் அதை எடுத்துக்கறதும் எடுத்துக்காம இருக்கிறதும் அவரவர் இஷ்டம். அதால பாதிப்புக்குள்ளானாலும் கூட அதற்கு அறுசுவை நிர்வாகம் பொறுப்பு இல்லை. அவங்கவங்க சுய விருப்பத்தின் பேர்ல பண்ணுறது இது. ஆனா அவங்க ஃபோன் பண்ணிட்டு இங்க வந்து சொன்னாங்க. எனக்கு படிக்க, அவங்க யோசிக்கிற மனநிலைல இல்லை, எது வேணும்னாலும் பண்ணிப்பாங்களோன்னு ஒரு கவலை வந்துது. எச்சரிக்கத் தோன்றிற்று. நீங்க எப்படி உதவ நினைச்சீங்களோ அதே போலதான் இமாவும் உதவ நினைச்சேன். எச்சரித்தேன். அவ்வளவுதான் சுகன்யா. உங்களை நான் தப்பு சொல்லல. அப்பிடி சொல்றேன்னு நீங்க நினைச்சா.... இல்லைன்னு ப்ரூவ் பண்ணிருங்க. இங்கயே டாக்டர் பெயரையும் மீதி விபரங்களையும் கொடுத்துருங்க. எல்லாம் சரியாகிரும். :-)

‍- இமா க்றிஸ்

இம்மாஅக்கா, எந்த‌ டாக்டர் எனக்கும் சொல்லுங்க‌. நானும் பார்க்கிறேன். எனக்கும் குழந்தை இல்லை. உதவுங்கள்

மேலும் சில பதிவுகள்